Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பிளேயிங் 11இல் இடம் உண்டா.. இல்லையா? சர்ஃபராஸ் கானிடம் தெளிவா சொல்லிடுங்க”.. அஸ்வின் அட்வைஸ்

மும்பை: இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சர்ஃபராஸ் கானுக்கு அவரது வேலை என்ன என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கு அஸ்வின் கூறி உள்ளார்.

டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த சாய் சுதர்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் சர்ஃபராஸ் கானை, சமீபகாலமாக சுழற்பந்துக்கு எதிராகத் தடுமாறி வரும் துருவ் ஜூரலுக்குப் பதிலாக அணியில் சேர்க்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.

Ravichandran Ashwin urges Gautam Gambhir and Ajit Agarkar to define clear role for Sarfaraz Khan

ஆனால், தற்போதைக்கு துருவ் ஜூரலுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சர்ஃபராஸ் கான் தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறி இருக்கிறார். அதே நேரத்தில், பிளேயிங் 11-இல் சர்ஃபராஸ் கானின் நிலை குறித்து அணி நிர்வாகம் அவரிடம் தெளிவான தகவலைப் பகிர வேண்டும் என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அஸ்வின், "சில வெளிநாட்டு ஆடுகளங்களில் சர்ஃபராஸ் கான் தடுமாறுவார் என அணி நிர்வாகம் நினைத்தால், அதை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்க வேண்டும். 'சர்ஃபராஸ், ஆசிய ஆடுகளங்களில் விளையாட மட்டுமே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்று கூறிவிட்டால், அவர் தனது நேரத்தை வீணடிக்காமல் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தி, இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களின் ராஜாவாக மாற முடியும்" என்று கூறினார்.

உலக அளவில் ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்யும் வழக்கம் உள்ளது. ஆஸ்திரேலியா அணி ஆசிய ஆடுகளங்களுக்காக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை தேர்வு செய்ததையும், உஸ்மான் கவாஜா சுழற்பந்தைச் சமாளிக்க மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டதையும் அஸ்வின் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

IND vs SL:

IND vs SL: "இந்த சீனியர் இந்திய வீரரால்தான் எங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து".. இலங்கை கேப்டன் பேச்சு

சர்ஃபராஸ் கான் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 371 ரன்கள் குவித்தார். அவர் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடினாலும், ஷார்ட்-பிட்ச் பந்துகளுக்கு எதிராகத் தடுமாறுகிறார் என்ற விமர்சனமும் இருந்தது. இதற்கிடையில், பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல், முதல் டெஸ்டில் 3-வது இடத்தில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, August 14, 2026, 8:09 [IST]
Other articles published on Aug 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+