Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்யா அஸ்வின்.. கங்குலி செம ஹேப்பி.. கோடிகளில் டீலை முடித்த ஐபிஎல் அணி.. பரபர அணி மாற்றம்!

Recommended Video

Watch Video : Reason behind Ashwin not getting chance in test match?

டெல்லி : இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை பஞ்சாப் அணியிடம் இருந்து வாங்க உள்ளது டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி.

2019 ஐபிஎல் தொடருக்கு முன் அணிகளை தயார் செய்யும் முயற்சியில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்கள் அணியின் கேப்டனும், முக்கிய பந்துவீச்சாளருமான அஸ்வினை நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

மாற்றம் உறுதி

மாற்றம் உறுதி

அதை அடுத்து அஸ்வினை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள இரு ஐபிஎல் அணிகள் கடும் முயற்சி செய்தன. அந்த முயற்சியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எல்லா பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாகவும், பிசிசிஐ ஒப்புதல் மட்டுமே பாக்கி என்ற தகவலும் கிடைத்துள்ளது. என்ன தான் நடந்தது?

அஸ்வின் கேப்டன்சி

அஸ்வின் கேப்டன்சி

கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் அனுபவ வீரர் அஸ்வினை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அஸ்வினும் பல வித்தியாசமான நகர்வுகளை மேற்கொண்டு சிறந்த கேப்டன்களில் ஒருவர் என பெயர் எடுத்தார்.

இரண்டு ஆண்டு தோல்விகள்

இரண்டு ஆண்டு தோல்விகள்

ஆனால், அவரது நகர்வுகள் வெற்றிகளாக மாறவில்லை. பஞ்சாப் அணிக்கு 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏழாம் இடமும், 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆறாம் இடமும் தான் கிடைத்தது. இது அஸ்வினுக்கு பின்னடைவாக அமைந்தது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

பஞ்சாப் அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக அஸ்வினை அணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக பின்னர் தகவல்கள் வந்தன. முன்னதாக, பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனையும் பதவி நீக்கம் செய்து இருந்தது அந்த அணி.

இரு அணிகள் போட்டி

இரு அணிகள் போட்டி

அஸ்வினை வேறு அணிகளுக்கு கைமாற்றி விட பஞ்சாப் அணி முன் வந்தது. இரண்டு ஐபிஎல் அணிகள் உடனடியாக கோதாவில் குதித்தன. அந்த அணிகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ்.

கங்குலி உறுதி

கங்குலி உறுதி

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் சௌரவ் கங்குலி, அஸ்வினை வாங்கியே தீர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. சமீபத்தில் கூட அஸ்வின் வந்தால் நல்லது என பேட்டியில் கூறி இருந்தார் கங்குலி.

டீல் முடிந்தது

டீல் முடிந்தது

இந்த நிலையில், அஸ்வின் கடந்த 2018இல் எடுக்கப்பட்ட ஏல விலையான 7.6 கோடி கொடுத்து வாங்க டீல் பேசி முடித்து இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். இது தொடர்பாக இரு அணிகள் இடையே ஒப்பந்தம் கூட தயாராகி விட்டதாகவும், பிசிசிஐ ஒப்புதல் மட்டுமே பாக்கி உள்ளது எனவும் கூறப்படுகிறது.

நான்காவது ஐபிஎல் அணி

நான்காவது ஐபிஎல் அணி

இந்த மாற்றத்துடன் அஸ்வின் தன் நான்காவது ஐபிஎல் அணியில் சேர உள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், பின்னர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் ஆடி இருக்கிறார் அஸ்வின்.

Story first published: Wednesday, September 4, 2019, 19:40 [IST]
Other articles published on Sep 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+