For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"வெற்றிக்கு பின் கண்ணீர்.. இதயம் நொறுங்கிய தருணம்.." அஸ்வின் மனைவி ப்ரீத்தி உருக்கமான கடிதம்

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரீத்தி உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். அது பற்றி அவரது மனைவி ப்ரீத்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் இடம் பெற்று இருப்பது இதுதான்.

"கடந்த இரண்டு நாட்களாக எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்கான அர்ப்பணிப்பாக எழுதலாமா? அல்லது வாழ்க்கை துணை என்ற கோணத்தில் எழுதலாமா? அல்லது ஒரு ரசிகையின் காதல் கடிதமாக எழுதலாமா? என எனக்கு தெரியாமல் இருந்தது. இது எல்லாவற்றின் கலவையாக இது இருக்கும் என நினைக்கிறேன்."

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs


"அஸ்வினின் பத்திரிக்கையாளர் சந்திப்பை இரண்டு நாட்கள் முன்பு பார்த்த போது நான் பல சிறிய மற்றும் பெரிய தருணங்களை யோசித்துப் பார்த்தேன். கடந்த 13 - 14 ஆண்டுகளில் பலப் பல நினைவுகள் உள்ளன. பெரிய வெற்றிகள், தொடர் நாயகன் விருதுகள், ஒரு ஆக்ரோஷமான போட்டிக்கு பின் அறையில் நிலவும் நிசப்தம், சில போட்டிகளுக்கு பின்னர் மாலை நேரத்தில் நீண்ட நேரம் ஒலிக்கும் குளியல் அறையின் தண்ணீர் சத்தம், தனது எண்ணங்களை ஒரு காகிதத்தில் பென்சிலால் அவர் எழுதுவது, போட்டி திட்டங்களை மேற்கொள்வதற்காக இடைவிடாமல் கிரிக்கெட் வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருப்பது, ஒரு போட்டிக்கு செல்லும் மூச்சுப் பயிற்சி செய்வது, சில பாடல்களை இடைவிடாமல் கேட்பது."

"சில வெற்றிகளுக்கு பின்னர் கண்ணீரில் இருந்தது. குறிப்பாக சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி (2013), மெல்போர்ன் கிரிக்கெட் போட்டியின் வெற்றி, சிட்னி போட்டி டிரா, காபா போட்டி வெற்றி, டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்தது... ஆகியவற்றை சொல்லலாம்."

"சில சமயங்களில் நாம் அமைதியாக அமர்ந்திருந்தோம். சில சமயம் நமது இதயம் நொறுங்கி இருந்தது. ஒரு கிரிக்கெட் வீரருக்கான பையை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என தெரியாமல் இருந்ததிலிருந்து, உங்களுடன் உலகின் அனைத்து கிரிக்கெட் மைதானங்களுக்கும் சென்றது வரை.. நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தது.. உங்களை பார்த்து கற்றுக்கொண்ட விஷயங்கள்.. இவை அனைத்தும் அற்புதமானவை."

"நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய உலகம், நான் விரும்பிய விளையாட்டை மிக அருகில் இருந்து பார்க்கவும், கொண்டாடுவதற்கும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ஆகியவற்றை மறக்க முடியாது. விருதுகள், சிறந்த புள்ளி விவரங்கள், ஆட்டநாயகன் விருதுகள், பட்டங்கள், சாதனைகள் இவை எதுவுமே நமது திறமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்றால் முக்கியம் இல்லாமல் போய்விடும்."

"சில சமயம் என்ன செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. உங்களுடைய சர்வதேச கிரிக்கெட்டை நீங்கள் முடித்துக் கொண்டது பற்றி சொல்ல வேண்டும் என்றால் எல்லாம் நன்றாகவே இருந்தது. எல்லாம் நன்றாகவே இருக்கும். உங்களுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு இது தான் நேரம். உங்களுக்கு பிடித்தது போல வாழ்க்கையை வாழுங்கள்."

"கூடுதலாக சாப்பிடுவதற்கான இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். எதுவுமே செய்யாமல் இருப்பதற்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மீம்ஸ்களை நாள் முழுவதும் பகிர்ந்து கொண்டே இருங்கள். புதிய பவுலிங்கை கண்டுபிடியுங்கள். நமது குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். எல்லாவற்றையும் செய்யுங்கள்." என்று எழுதி இருக்கிறார் ப்ரீத்தி அஸ்வின்.

Story first published: Saturday, December 21, 2024, 10:26 [IST]
Other articles published on Dec 21, 2024
English summary
Ravichandran Ashwin's wife Prithi shared a heartfelt post after retirement
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+