ஜடேஜாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 'ஆடி' கார்.. வாரி வழங்கிய வருங்கால மாமனார்!
ராஜ்கோட்: திருமண அன்பளிப்பாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.95 லட்சம் மதிப்புள்ள ஆடி நிறுவனத்தின் கியூ7 வகை காரை அவரது வருங்கால மாமனார் வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு, கான்ட்ராக்டர் ஹர்தேவ் சிங் சோலங்கி என்பவரின் மகள் ரீவா சோலங்கியுடன் கடந்த பிப்ரவரி 16ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இம்மாதம் 17ம் தேதி இருவரும் மணமுடிக்க உள்ளனர்.
இந்நிலையில், தனது மருமகன்-மகள் உல்லாசமாக பயணம் செய்ய ஆடி நிறுவனத்தின், கியூ-7 வகை சொகுசு காரை ஹர்தேவ்சிங் வழங்கியுள்ளார். இதன் சந்தை மதிப்பு ரூ.95 லட்சமாகும்.
மாமனார் வாழ்க
காரில் தனது வருங்கால மனைவியுடன் அமர்ந்தபடி, போட்டோ எடுத்துள்ளார் ஜடேஜா. இதை ஜடேஜாவின் போலி அக்கவுண்டில் ஒருவர் ஷேர் செய்துள்ளார் "எனது மாமனார் வீட்டில் எவ்வளவு சிறப்பான கிஃப்ட் தந்துள்ளனர்.. எல்லோருக்குமே இப்படி ஒரு மாமனார் குடும்பம் வாய்க்க வேண்டும்" என்று போட்டோவுக்கு கீழேயே அந்த நபர் கருத்தும் கூறியுள்ளார்.

சொகுசு கார்
ஜடேஜாவின் வருங்கால மாமியார் பிரஃபுலபா சோலங்கி, இந்திய ரயில்வே ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜாவிடம் ஏற்கனவே கியூ3 வகை கார் உள்ளது. கியூ7 வகை கார் அதைவிட சொகுசு வசதிகள் அதிகமுள்ளதாகும்.

பேட்சுலர் பார்ட்டி
ஏப்ரல் 17ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், முந்தைய நாள் இரவு, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், மிகவும் நெருக்கமான சிலருக்கும், விருந்து கொடுத்து அசத்த உள்ளாராம் ஜடேஜா.
கிடைப்பார்களா
எல்லோருக்கும் இப்படி ஒரு மாமனார் எல்லோருக்கும் அமைந்துவிடுவார்களா என்ன? அப்படியே அமைந்துவிட்டாலும், நாம் அந்த கிஃப்டை வாங்காமல் டீசன்டாக மறுத்துவிடமாட்டோமா என்ன?


Click it and Unblock the Notifications