Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பேக்னா இப்படித்தான் இருக்கனும்.. வங்கதேசத்தை வச்சி செஞ்ச ஜடேஜா!

Recommended Video

ஜடேஜா அசத்தல்... இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு

துபாய்: இரு நாட்கள் முன்பு வரை துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவோம் என்று ரவீந்திர ஜடேஜா கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

சௌராஷ்ட்ரா அணிக்காக உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் ஆடிக்கொண்டு சிவனே என்று தான் இருந்தார் ஜடேஜா.

அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்டியா ஆகிய இரு வீரர்களின் காயம், ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியின் கதவுகளை திடீரென திறந்து விட்டது.

கம்பேக்

கம்பேக்

ஆனால் ஏனோ தானோ என்று அவர் திரும்பவில்லை. கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் வகையில் ஒரு போட்டியுடன் களமிறங்கிவிட்டார் ஜடேஜா. அதுவும் எப்படி.. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்பு இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் ஆடி கலக்கிவிட்டார் ஜடேஜா. அவரே கூறியதை போல 480 நாட்கள் கடந்தபிறகு ஒருநாள் அணிக்கு அவர் திரும்பியிருந்தார்.

கொஞ்சம் தடுமாற்றம்

ஆனால் தொடக்கம் சற்று தடுமாற்றத்துடன் தான் இருந்தது. ஒரு நோபால் மற்றொரு டெட் பால் என தடுமாற்றத்துடன் தான் தொடங்கினார். ஆனால் 136 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜடேஜா, இந்தத் தடையில் இருந்து மீண்டு வந்தார். 2 பவுண்டரிகள் விளாசப்பட்டதும் ரோஹித் சர்மாவும், தோனியும், ஜடேஜா அருகே வந்தனர்.

கை மேல் பலன்

ஃபில்டர்கள் நிறுத்தப்பட்ட இடங்கள் மாற்றப்பட்டன. மிட்விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த தவான், பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசைக்கு அனுப்பப்பட்டார். அதற்கு பலனாக நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது கேட்ச்சை அவர் பிடித்தார். இப்படித்தான் வகுக்கப்பட்டது வியூகம்.

ஜடேஜா தாறுமாறு

தான் எதிர்பார்த்தபடியே கேப்டன் செயல்பட்டதால், விக்கெட்டுகளை அள்ளிப் பருகினார் ஜடேஜா. இந்திய அணிக்காக நேற்று அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியது ஜடேஜாதான். 10 ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா வெறும் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச பேட்டிங் லைவ்அப்பை தரைமட்டமாக்கி விட்டார். இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கிவிட்டார்.

Story first published: Saturday, September 22, 2018, 10:29 [IST]
Other articles published on Sep 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+