Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில் தேவ்-ன் நீண்ட வருட சாதனை.. ஆஸி, தொடரில் தகர்த்தெறிந்த ரவீந்திர ஜடேஜா.. அடுத்து அஸ்வினும் ரெடி!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான முஹல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஜாம்பவான் கபில் தேவின் நீண்ட கால சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்தார். அஸ்வினும் ஜடேஜாவுக்கு அருகில் நெருங்கிவிட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 321 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து வலுவான சூழலில் உள்ளது. இந்தியாவின் இந்த வலுவான நிலைக்கு ரோகித் சர்மாவின் சதம் ஒரு காரணம் என்றால், மற்றொருபுறம் ஜடேஜாவின் ஆட்டமும் காரணமாகும்.

சிறப்பான அரைசதம்

சிறப்பான அரைசதம்

காயத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் தந்த ரவீந்திர ஜடேஜா பவுலிங்கில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதே போல பேட்டிங்கில் இந்திய அணி 240க்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, களமிறங்கிய ஜடேஜா அரைசதம் அடித்து ஸ்கோரை உயர்தியுள்ளார். 2வது நாளின் முடிவில் 170 பந்துகளில் 66 ரன்களை அடித்து அவர் விளையாடி வருகிறார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இந்நிலையில் இந்த ஆட்டம் மூலம் முக்கிய சாதனை ஒன்றை ஜடேஜா தகர்த்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ் முதலிடத்தில் இருந்தார். இவர் 4 முறை இது போன்று அசத்தியிருக்கிறார். ஆனால் இன்று ரவீந்திர ஜடேஜா 5வது முறையாக ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதத்தை அடித்துள்ளார். இந்த பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்தில் இருக்கிறார். அவர் 3 முறை இதை செய்திருக்கிறார்.

ஜடேஜாவின் ரெக்கார்ட்

ஜடேஜாவின் ரெக்கார்ட்

கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக காயத்தில் இருந்த போதும் ரவீந்திர ஜடேஜாவின் டெஸ்ட் ரெக்கார்ட் புதிய உச்சத்தில் உள்ளது. 2021ம் ஆண்டில் இருந்து மட்டும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 311 ரன்களை குவித்துள்ளார். இதில் 1 சதமும் 2 அரைசதங்களும் அடங்கும். அவரின் சராசரி மட்டும் 77.5 ரன்களாக உள்ளது. பந்துவீச்சிலும் 20 விக்கெட்களை குவித்திருக்கிறார்.

 சதம் அடிப்பாரா?

சதம் அடிப்பாரா?

சுழலுக்கு சாதகமான நாக்பூர் பிட்ச்-ல் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல் நன்கு செட்டிலாகி விளையாடி வருகின்றனர். 8வது விக்கெட்டிற்கு அவர்கள் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர். நாளைய தினம் ஜடேஜா எப்படியும் சதத்தை பூர்த்தி செய்துவிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Friday, February 10, 2023, 23:22 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+