ப்ளவர்னு நினைச்சியா ஃபயறு..! புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய ஜடேஜா..! செம்மரக்கட்டை போல் சரியும் விக்கெட்
லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜா, புஷ்பா ஸ்டைலில் விக்கெட்டை கொண்டாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
டாஸ் வென்று முதலில் இலங்கை பந்துவீசியது. இதில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் விளாசினர்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 199 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பல மாதங்களுக்கு பிறகு ஜடேஜா அணிக்கு திரும்பினார்.

திரும்பிய ஜடேஜா
காயத்திலிருந்து குணமடைந்த அவர், எப்படி பந்துவீசுவார், எப்படி ரன் குவிப்பார் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள், பெரிதும் ஜடேஜாவை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஜடேஜா எவ்வித சிக்கலும் இன்றி பந்துவீசினார்.

புஷ்பா ஸ்டைல்
தனது வழக்கமான மாயஜால பந்துவீச்சை ஜடேஜா வீசினார். அதனை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்களும் திணறினர். குறிப்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சந்திமாலின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். வீழ்த்தியவுடன் புஷ்பா திரைப்பட படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை ஸ்டைலாக தடவும் மெனரிசனத்தை ஜடேஜா செய்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜடேஜாவின் இந்த ஸ்டைலை கண்டு ரோகித் சர்மா ஆச்சரியத்துடன் கட்டிப்பிடித்து பாராட்டினார். தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சிலர், ஜடேஜானு பிளவர் இல்ல, ஃபயர் என்றும், ஒரு சிலர் சர் ரவிந்திர புஷ்பா என்றும் போட்டு பாராட்டி வருகின்றனர்.

அபார பந்துவீச்சு
ஜடேஜா, இந்த இன்னிங்சில் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் என்று போட்டிக்கு முன் ரோகித் சர்மா கூறியிருந்தார். ஜடேஜா திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது வருகை அணியின் பலத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications