For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே த்ரில் வெற்றி... அபாரமாக முடித்து கொடுத்து கொண்டாடிய ஜடேஜா... ரசிகர்கள் ஹாப்பி!

துபாய் : நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்களை அடித்து போட்டியை சிறப்பாக முடித்து கொடுத்தார்.

வெற்றியை அடுத்து அவர் மைதானத்தில் தம்ஸ்-அப் முத்திரையுடன் தன்னுடைய ஜெர்சியில் உள்ள தன்னுடைய பெயரையும் சுட்டிக் காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

சிஎஸ்கே அபார வெற்றி

சிஎஸ்கே அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதிய நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிப் பெற்றுள்ளது. கேகேஆரின் 173 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் சிஎஸ்கேவின் வெற்றியை உறுதி செய்தனர்.

ரவீந்திர ஜடேஜா சிறப்பு

ரவீந்திர ஜடேஜா சிறப்பு

இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, அதையடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார். 11 பந்துகளில் 31 ரன்களை குவித்தார். அதில் 3 சிக்ஸ்கள் மற்றும் 2 போர்களும் அடக்கம். இறுதி இரண்டு பந்துகளில் அவர் அடித்த அடுத்தடுத்த இரண்டு சிக்ஸ்களே இந்த திரில் வெற்றியை அளித்துள்ளது.

பயன்படுத்தப்படும் இளம் வீரர்கள்

பயன்படுத்தப்படும் இளம் வீரர்கள்

சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு இந்த சீசனில் செல்ல முடியாது என்றபோதிலும் இந்த அடுத்தடுத்த வெற்றிகள் சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இளம் வீரர்களின் திறமைகளை அந்த அணி பயன்படுத்த துவங்கியுள்ளது. அனுபவ வீரர்களையும் தள்ளி வைக்கவில்லை என்பதையே ஜடேஜாவின் இந்த ரன்கள் குறிப்பிடுகின்றன.

ஜடேஜா கொண்டாட்டம்

இந்நிலையில், இந்த வெற்றியை அடுத்து போட்டியை சிறப்பாக முடித்து கொடுத்த ரவீந்திர ஜடேஜா, தம்ஸ் அப் முத்திரையுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னுடைய கையை கொண்டு, தன்னுடைய ஜெர்சியில் உள்ள தன்னுடைய பெயரையும் சுட்டிக் காட்டி கொண்டாட்டத்தை தொடர்ந்தார். இந்த வீடியோவை ஐபிஎல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Story first published: Friday, October 30, 2020, 9:49 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
Ravindra Jadeja celebrated in style after helping CSK defeat KKR
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+