Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா ஓய்வு? இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு.. கதறும் ரசிகர்கள்.. ஓய்வு முடிவை எடுத்தாரா?

மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிரிக்கெட் ஜெர்ஸி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருக்கிறாரா? என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா அந்தப் பதிவில் வேறு எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. தனது டெஸ்ட் ஜெர்சி புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் அவர் ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

ind vs eng india england

அதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அந்த இரண்டு ஒருநாள் தொடர்களுக்கான அணிகளிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனிடையே தான் ஜடேஜா ஓய்வு முடிவு குறித்த சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.

அவர் டெஸ்ட் போட்டி ஜெர்ஸி புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கும் நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப் போகிறாரா? அல்லது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. முன்னதாக அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே ஓய்வை அறிவித்து விடை பெற்றார். அந்த டெஸ்ட் தொடரின் முடிவில் இனி ரோஹித் சர்மாவுக்கும் டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாது என கூறப்பட்டது. அதே போல விராட் கோலி இனி உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடி தனது ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால், ஜடேஜாவுக்கு மட்டுமே இனி டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ஜடேஜா ஓய்வு பெறப் போவதாக சூசகமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

Story first published: Saturday, January 11, 2025, 8:34 [IST]
Other articles published on Jan 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+