Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் இப்படியா??.. டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி.. ஜடேஜாவின் நிலைமை என்ன தெரியுமா?

துபாய்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவாரா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

Recommended Video

Asia Cup: Ruled Out ஆனார் Ravindra Jadeja! Replacement ஆக வந்த Axar Patel |Aanee's Appeal

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை அறிவித்துவிட்டனர்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

அந்தவகையில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதிலும் பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாடும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கூறியுள்ளது. இந்த சூழலில் தான் ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி பிசிசிஐ-க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளார்.

தரமான கம்பேக்

தரமான கம்பேக்

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாமல் ஆசிய கோப்பையில் கம்பேக் தந்தார். ஆனால் அதே காயம் மீண்டும் அவரை தொடரில் இருந்து வெளியேற வைத்துள்ளது. இந்த முறை அவர் எத்தனை நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். டி20 உலகக்கோப்பைக்குள் அவர் தயாராகிவிடுவாரா என்பதும் தற்போது கேள்வியாக உள்ளது.

அறுவை சிகிச்சை?

அறுவை சிகிச்சை?

ஜடேஜாவுக்கு பழைய காயமே மீண்டும் அதிகமாகியுள்ளது. இது டி20 உலகக்கோப்பையிலும் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். எனவே அவருக்கு அறுவை சிகிச்சை ஏதாவது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், குறைந்தது 2 மாதங்களுக்கு எந்தவித போட்டியிலும் விளையாட முடியாது.

குறுகிய காலக்கெடு

குறுகிய காலக்கெடு

ஒருவேளை அறுவை சிகிச்சை தேவையில்லை என்றால், அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்குள் ஜடேஜா தயாராக வேண்டும். அப்போது தான் இந்திய அணி தனது திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும். எனவே இதில் எது சாத்தியமான ஒன்று என்பது இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும்.

Story first published: Saturday, September 3, 2022, 20:21 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+