ஆளுக்கு ஒரு பக்கமா கயிறை பிடிச்சு.. என்னப்பா பண்றீங்க? பண்ணையில் ஜடேஜா ஜாலி வாக்!
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
Recommended Video
அவர் வாள்வீச்சு, குதிரை ஏற்றம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். போட்டிகளில் கூட பேட்டிங்கில் அரைசதம், சதம் அடித்தால் தன் பேட்டை வாள் போல வீசிக் காட்டுவார்.
அவர் குதிரையில் ஏறி தன் பண்ணையில் சுற்றி வரும் காட்சிகளை சில முறை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர்
தற்போது ஐபிஎல் தொடரில் அவர் ஆடி இருக்க வேண்டும். எனினும், ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

குதிரை ஏற்றம்
லாக்டவுனில் தன் பண்ணை வீட்டில் முடங்கி இருக்கும் ஜடேஜா, வாள் வீச்சு, குதிரை ஏற்றம் குறித்து வீடியோக்கள் பகிர்ந்துள்ளார். முன்னதாக உண்மையான வாளை வைத்து அவர் போர் வீரனைப் போல சுழற்றிய காட்சிகள் வெளியானது.

குதிரையில் பவனி
அதைத் தொடர்ந்து தன் பண்ணையில் குதிரையில் அமர்ந்து பவனி வரும் காட்சிகள் வெளியாகி வைரல் ஆனது. தற்போது தன் பண்ணையில் உள்ள குதிரை ஒன்றை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன் பெயர் லால்பீர்.

வாக்கிங் சென்ற ஜடேஜா
அந்த குதிரையை மற்றொருவருடன் சேர்ந்து பிடித்துக் கொண்டு இருக்கிறார் ஜடேஜா. குதிரை அடங்க மறுக்கிறது. அதை "ஹோ, ஹோ" எனவென சமாதானம் செய்து மெதுவாக அழைத்து ஒரு வாக்கிங் போகிறார். இந்த வீடியோ தான் இப்போது வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications