Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டே பந்தில் ஆட்டத்தை மாற்றிய ஜடேஜா.. சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்.. கொல மாஸ் சாரே

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கடைசி இன்னிங்சில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாகும்.

இதனால் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தொடக்க வீரராக தேர்வு செயயப்பட்டுள்ளார்.

இதே போன்று இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் பரத் ஆகியோர் அறிமுக வீரராக களமிறங்கினர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணி குற்றஞ்சாட்டியது.

வார்னர் அவுட்

வார்னர் அவுட்

ஆனால், ஆண்டி கிளைமாக்சாக தான் ஆஸ்திரேலிய அணிக்கு போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் 2 தொடக்க வீரர்களும் வேகப்பந்துவீச்சுக்கு தான் தங்களது விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷமி ஸ்டம்பை நோக்கி பந்துவீச, அதனை கணிக்க தவறினார் வார்னர். இதனால் வார்னர் ஸ்டம்ப் வாக்கிங் சென்றது.

உஸ்மான் கவாஜா ஆட்டமிழப்பு

உஸ்மான் கவாஜா ஆட்டமிழப்பு

இதே போன்று மறுமுனையில் நின்ற உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டையும் முகமது சிராஜ் எல்பிடபியூ முறையில் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 2 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சுழற்பந்துவீச்சுக்கு நாம் தயாரானால், வேகப்பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து விட்டோமே என்ற விரக்தியில் பெவிலியன் நோக்கி சென்றார்கள்.

ஜடேஜா மேஜிக்

ஜடேஜா மேஜிக்

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபஸ்சேன் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஸ்மித் நங்கூரம் போட்டு களத்தில் நிற்க, மறுமுனையில் நின்ற மார்னஸ் லாபஸ்சேன் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதில் 8 பவுண்டரிகளை அடித்த நிலையில், 49 ரன்கள் எடுத்த நிலையில் தான் ஜடேஜாவின் மேஜிக் ஆஸ்திரேலியாவை திணற அடித்தது.

லாபஸ்சேன் 49

லாபஸ்சேன் 49

மார்னஸ் லாபஸ்சேன் அதிரடியாக ஆட நினைத்து கொஞ்சம் இறங்கி வர, ஜடேஜா பந்தை நன்றாக திருப்பினார். இதனை கணிக்க தவறிய லாபஸ்சேன், ஸ்டம்பிட் ஆனார். பந்தை சிறப்பாக பிடித்து தோனியை போல் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்க செய்தார். இதனைத் தொடர்ந்து மாட் ரீன்ஷா களத்திற்கு வந்தார்.

ஸ்மித் அதிர்ச்சி

ஸ்மித் அதிர்ச்சி

அப்போது மீண்டும் ஜடேஜா பந்தை மாட் ரீன்ஷாவின் காலை நோக்கி வீச, அவர் எல்பிடபிள்யூ ஆனார். இதன் மூலம் அடுத்தடுத்து 2 பந்தில் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஸ்மித் பவுண்டரிகளாக விளாசிய நிலையில், ஜடேஜா இம்முறை பந்தை திருப்பாமல் நேராக வீசினார் இதில் ஸ்மித் கிளின் போல்ட் ஆனார். இதன் மூலம் 118 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.

Story first published: Thursday, February 9, 2023, 13:32 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+