Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவால் இந்திய அணிக்கு சிக்கல்.. ரிவ்யூ எடுப்பதில் உள்ள பிரச்சனை.. 3 வருடத்தில் 22 டிஆர்எஸ்-இல் 0

கொழும்பு: டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சில் பல சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, டிஆர்எஸ் முறையில் ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார். அதனால் இந்திய அணிக்கும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிக்கல் எழுகிறது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது கேசரா நுவந்தாவுக்கு எதிராக ஜடேஜா எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்து டிஆர்எஸ் எடுத்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டது ரீப்ளேயில் தெளிவாகத் தெரிந்ததால் இந்தியா ரிவியூவை இழந்தது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா வீசிய பந்துகளில் தொடர்ந்து 22 முறை எடுக்கப்பட்ட டிஆர்எஸ் ரிவியூக்களில் ஒன்றில் கூட கள அம்பயரின் தீர்ப்பை மாற்ற முடியாமல் ஜடேஜா சொதப்பியுள்ளார்.

Ravindra Jadeja has worst DRS record with 22 Unsuccessful Reviews in Test Cricket

இந்த 22 ரிவியூக்களில் 18 முற்றிலும் தோல்வியடைந்து இந்தியா தனது ரிவியூக்களை இழந்தது. 4 ரிவியூக்கள் மட்டுமே 'அம்பயர்ஸ் கால்' முறையில் தப்பின. ஜடேஜா கடைசியாகக் கடந்த 2023 ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டொமினிகா டெஸ்டில் கீமர் ரோச்சை அவுட்டாக்க டிஆர்எஸ்ஸை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். அது அவரது 271 வது விக்கெட்டாகும். அதன் பிறகு அவர் 82 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது 353 விக்கெட்டுகளை எட்டியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கூட பசிந்து சூரியபண்டாராவை 80 ரன்களுக்கு அவுட்டாக்கி இந்திய அணிக்கு உதவினார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீசிய பந்துகளில் எடுக்கப்பட்ட ஒரு டிஆர்எஸ் கூட அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

ஜடேஜாவின் இந்த அதீத ஆர்வம் குறித்து 2023 இல் கேப்டன் ரோஹித் சர்மா வேடிக்கையாகக் கூறுகையில், "ஜடேஜாவுக்கு ஒவ்வொரு பந்தும் அவுட் என்றே தோன்றும்" எனச் சுட்டிக்காட்டியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தூர் டெஸ்டில் கூட ஜடேஜாவின் ஆர்வத்தால் இந்தியா தனது 3 ரிவியூக்களையும் வீணடித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அசத்தலாக விக்கெட் வீழ்த்தினாலும், டிஆர்எஸ் எடுக்கும் போது ஜடேஜா சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Story first published: Wednesday, August 26, 2026, 14:07 [IST]
Other articles published on Aug 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+