Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பா பௌலிங் போடறாரு... பேட்டிங்ல சூப்பரா முன்னேறியிருக்காரு... ரஹானே பாராட்டு யாருக்கு?

சிட்னி : இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றத்தை காட்டி வருவதாக அஜிங்க்யா ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா இரண்டாவது போட்டியில் பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் மட்டுமல்லாமல், 57 ரன்களையும் அடித்தார்.

இதன்மூலம் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் அபாரமான வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

சிட்னியில் 3வது போட்டி

சிட்னியில் 3வது போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் சிட்னியில் நாளை 3வது போட்டி துவங்கவுள்ளது. கடந்த இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

அதகளம் செய்த ஜடேஜா

அதகளம் செய்த ஜடேஜா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா அடுத்த போட்டியில் பங்கேற்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 57 ரன்களையும் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். சமீப காலங்களில் அவரது பேட்டிங் திறன் அதிகரித்துள்ளது.

ரஹானே பாராட்டு

ரஹானே பாராட்டு

இந்நிலையில் ஜடேஜாவின் பேட்டிங் குறித்து கேப்டன் ரஹானே பாராட்டு தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங்கில் அவர் எப்போதுமே பெஸ்ட் தான் என்றும் ரஹானே குறிப்பிட்டுள்ளார். இது தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அணியின் பலம் ஜடேஜா

அணியின் பலம் ஜடேஜா

நம்பர் 7ஆக இருந்துக் கொண்டு பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண்பிப்பது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கேட்ச்களை பிடிப்பதிலும் சிறப்பானவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ள ஜடேஜா, அவர் அணியில் இணைந்துள்ளது மிகப்பெரிய பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, January 6, 2021, 19:22 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+