Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்ல இருந்து நீக்கப்பட்ட ஜடேஜா... 6 வாரத்துக்கு ரெஸ்ட் எடுக்கணுமாம்!

டெல்லி : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளன.

முதலில் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ள நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது பங்கேற்பு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டி 5ம் தேதி துவக்கம்

டெஸ்ட் போட்டி 5ம் தேதி துவக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளன. முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

27ம் தேதி சென்னை வருகை

27ம் தேதி சென்னை வருகை

இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் வரும் 27ம் தேதி சென்னை வரவுள்ளனர். தங்களது 3 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சி போட்டிகளில் அவர்கள் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்து அணியினரும் 2 பிரிவுகளாக வரும் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை வரவுள்ளனர்.

ஜடேஜா நீக்கம்

ஜடேஜா நீக்கம்

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் 6 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பங்கேற்பு குறித்து பின்னர் முடிவு

பங்கேற்பு குறித்து பின்னர் முடிவு

இதையடுத்து ஜடேஜா நீக்கம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனது சிகிச்சைக்காக பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்ட்டுள்ளது.

Story first published: Thursday, January 21, 2021, 18:48 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+