Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி முதுகில் குத்திய ஜடேஜா..!! பேட்டிங் குறித்து பொய்.. !! சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை

தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் ஜடேஜா பேட்டிங் வரிசையில் 5வது வீரராக களமிறங்கி 18 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.

இதனால் 17. 1 வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடர்ந்து 11 போட்டியில் இந்தியா வென்றது.

வாய்ப்பு

வாய்ப்பு

காயம் காரணமாக 2 மாதம் ஓய்வுக்கு பிறகு இலங்கை தொடருக்காக அணியில் திரும்பினார் ஜடேஜா. எப்போதும் பேட்டிங் வரிசையில் 7வது வீரராக களமிறங்கும் ஜடேஜாவுக்கு ரோகித் 5வது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கினார். அப்போது, ஜடேஜா பேட்ஸ்மேனாக வளர்ந்து வருவதால் இனி அவரை நடுவரிசையில் அடிக்கடி பார்ப்பீர்கள் என்று கூறினார்.

ரோகித்தின் நம்பிக்கை

ரோகித்தின் நம்பிக்கை

அதற்கு ஏற்றார் போல், ஜடேஜா 2வது போட்டியிலும் அசத்திவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, நான் இப்போது எல்லாம் ஒரு பேட்ஸ்மேனாக உணர்கிறேன். ரோகித் சர்மா தான் என் மீது நம்பிக்கை வைத்து 5வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு அளித்தார். இதன் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு என்னால் விளையாட முடியும்.

நடுவரிசையில் களமிறங்குவேன்

நடுவரிசையில் களமிறங்குவேன்

என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய ரோகித்துக்கும், அணி நிர்வாகத்துக்கம் நன்றி. எதிர்காலத்திலும் இதே போன்று வாய்ப்பு கிடைத்தால், அதிலும் சிறப்பாக விளையாடுவேன் என்று ஜடேஜா நம்பிக்கை கூறினார். பேட்டிங்கை நான் மகிழ்ச்சியோடு எதிர்கொள்கிறேன். ஆட்டத்தை கடைசி வரை நின்று முடிக்க நினைக்கிறேன் என்றார்.

ரசிகர்கள் புகார்

ரசிகர்கள் புகார்

இதனிடையே, ஜடேஜாவை பேட்ஸ்மேனாக அடையாளப்படுத்தி அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கியது தோனி தான். சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜாவை நடுவரிசையில் களமிக்கி தோனி வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அது பற்றி ஜடேஜா வாய் திறக்காமல், ரோகித் சர்மாவுக்கு நன்றி கூறி, தோனியை முதுகில் குத்திவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Sunday, February 27, 2022, 10:08 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+