For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கணவனால் ஏமாற்றம் அடைந்த மனைவி.. பதக்கத்தை திருப்பி கொடுத்துருங்க ஜடேஜா.. லட்டு வாய்ப்பு போச்சு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் ஜடேஜா செய்த தவறு அவருடைய மனைவியை ஏமாற்றம் அடைய செய்தது.

Ravindra jadeja missed easy catch chance in today nz vs ind game

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி பல தோல்விகளை சந்தித்து இருக்கிறது. கடைசியாக உலக கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டு தான் நியூசிலாந்து அணியிடம் இந்தியா வெற்றி பெற்றது.

அதன் பிறகு பல போட்டிகளில் தோல்வியை தழுவியதால் இன்று வெற்றியை பெற வேண்டும் என ரோகித் சர்மா படை கடும் உத்வேகத்துடன் விளையாடி வருகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே டக் அவுட் ஆகி வெளியேற வில் யங் 17 ரன்களிலும் முகமது சமியின் முதல் பந்திலேயும் பெவிலியன் திரும்பினார்.

இதனால் 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறி வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் செய்ய வந்தார். இவருடைய விக்கெட்டை தொடக்கத்திலேயே இந்தியா வீழ்த்தி இருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமான ஒரு முடிவு கிடைத்திருக்கும்.

ஆனால் ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருக்கும் போது சமி பந்து வீச்சில் கொடுத்த ஒரு அழகான கேச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா கோட்டை விட்டார். இதைப் பார்த்ததும் மைதானத்தில் இருந்த அவருடைய மனைவி ஷாக் ஆனார். பொதுவாக ஜடேஜா பில்டிங்கில் கில்லி போல் இருப்பவர். ஆனால் இன்று கையில் வந்த கேட்சை அவர் தவறவிட்டது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

Ravindra jadeja missed easy catch chance in today nz vs ind game

நடப்பு உலக கோப்பையில் சிறப்பாக பில்டிங் செய்யும் வீரருக்கு தங்கப் பதக்கத்தை கொடுக்கும் ஒரு முயற்சி இந்திய அணி நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த போட்டியில் ஜடேஜா தங்கப் பதக்கத்தை வாங்கிய நிலையில் இன்று ஒரு எளிய கேட்சை அவர் தவறவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஜடேஜா நீங்கள் அந்த தங்கப் பதக்கத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Sunday, October 22, 2023, 15:48 [IST]
Other articles published on Oct 22, 2023
English summary
Ravindra jadeja missed easy catch chance in today nz vs ind game கணவனால் ஏமாற்றம் அடைந்த மனைவி.. பதக்கத்தை திருப்பி கொடுத்துருங்க ஜடேஜா.. லட்டு வாய்ப்பு போச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+