Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரால் கொட்டும் வருமானம்.. பிசினஸ், வீடு, கார்ஸ்.. ஜடேஜாவின் மொத்த சொத்து மதிப்பு என்ன?

அகமதாபாத் : இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திரா ஜடேஜாவின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

இந்திய அணிக்காக 2009ஆம் ஆண்டு அறிமுகமான ஜடேஜா, நட்சத்திர ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். இதுவரை 69 டெஸ்ட், 197 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, இதுவரை 226 போட்டிகளில் விளையாடி ஆல்ரவுண்டராக நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

Ravindra Jadeja net worth is more than Rs.123 Crores including his ipl salary and investments

ரவீந்திர ஜடேஜாவின் முக்கிய வருமானமாக ஐபிஎல் ஒப்பந்தமே உள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார். யு19 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜடேஜா, அதன்பின் கேரளா அணிக்கு விளையாடினார். இதையடுத்து சிஎஸ்கே அணிக்காக ஆடிய ஜடேஜா, 2 ஆண்டுகள் மட்டும் குஜராத் அணிக்காக விளையாடி இருந்தார்.

இதன் மூலம் மொத்தமாக 15 சீசன்களில் விளையாடி ரூ.109 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக ஆடிய ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் வருமானம் ஈட்டியுள்ளார். இதுமட்டுமல்லாமல் பிசிசிஐ-ன் ஏ+ கிரேடு ஒப்பந்தம் மூலமாக ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம் பெறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் இன்கிரெடிபிள் இந்தியா, செவன், அசிக்ஸ், ஸ்வாட், கினாரா, மை லெவன் சர்கிள், லைஃப் ஓகே, பாரத் பே, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பர ஒப்பந்தம் மூலமாக ரூ.1 கோடிக்கும் மேலாக வருமானம் வருகிறாது. அதேபோல் அகமதாபாத் நகரில் ரூ.6 கோடி மதிப்பிலான வீடு மற்றும் 3 சொகுசு கார்களை வைத்துள்ளார். ரூ.65 லட்சம் மதிப்பிலான அவ்டி க்யூ7 கார், ரூ.46 லட்சம் மதிப்பிலான அவ்டி ஏ4 கார் மற்றும் ரூ.40 லட்சம் பிஎம்டபிள்யூ எக்ஸ் ட்ரைவ் கார் ஆகியவற்றை வைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ரூ.14 லட்சம் மதிப்பிலான ஹயபூசா ரக பைக், சொந்தமாக 4 குதிரைகள் வைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ராஜ்கோட் நகரின் பல்வேறு பகுதிகளில் ஜட்டு'ஸ் ஃபுட் ஃபீல்ட் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை ஜடேஜா நடத்தி வருகிறார். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.3 கோடி அளவிற்கு வருமானம் வருவதாக தெரிய வருகிறது. இதன் மூலமாக ஜடேஜாவின் மொத்த மதிப்பு ரூ.123 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

Story first published: Saturday, February 10, 2024, 8:25 [IST]
Other articles published on Feb 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+