90-களின் "ரெட்ரோ" ஜெர்ஸி.. ஆரம்பமே "அதகளம்".. WTC Final-ல் காத்திருக்கும் "விருந்து"
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாத லாங் சீரிஸ் இது.
விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 2 கிளம்பி இங்கிலாந்து சென்ற பிறகு, அங்கு மீண்டும் 10 நாட்கள் குவாராண்டைனில் வைக்கப்பட உள்ளனர்.

இரு அணிகளும் சாம்பியன்ஸ்
இதற்கிடையே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் கண்டிஷன்ஸ்களை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது டையில் முடிந்தாலோ இந்தியா, நியூஸிலாந்து என இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். இரு அணிகளில் ஒரு அணிக்கு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்படாது. போட்டி டிராவில், டையில் முடிந்தால் இரு அணிகளும் சாம்பியன்களே.

எல்பிடபிள்யு அவுட்
இவை மட்டுமின்றி, மூன்று புதிய விதிகளை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது ஒரு பேட்ஸ்மேன் கிரீஸை சரியாகத் தொடாமல் ஓடிவிட்டால் (Short run) மூன்றாவது நடுவர் தாமாகவே அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த முடிவைக் Field அம்பயர்களுக்கு, அடுத்த பந்து வீசுவதற்குள் தெரிவிப்பார். எல்பிடபிள்யு அவுட் குறித்து ஃபீல்டிங் அணியின் கேப்டன் டிஆர்எஸ் ஆய்வுக்குக் கேட்கும் முன், அல்லது பேட்ஸ்மேன் டிஆர்எஸ் கோரும் முன், கள நடுவரிடம் உண்மையாகவே பேடில் பந்துபட்டதா என்பதை உறுதி செய்து கேட்க வேண்டும். எல்பிடபிள்யு அவுட் வழங்கும் முறையில் விக்கெட் (ஸ்டெம்ப்) உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பந்து ஸ்டெம்ப் பெயில்ஸ் பாதிப் பகுதியைத் தொடுமாறு சென்றாலும் அது Umpire's Call வழங்கப்படும். அதேபோல ஸ்டெம்பின் உயரம் மட்டுமல்லாது, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச் செல்லும் என்றாலும் Umpire's Call வழங்கப்படும்.

புதிய யூனிஃபார்ம்
இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் அணியவுள்ள 'ரெட்ரோ' ஜெர்ஸியை ரவீந்திர ஜடேஜா அறிமுகம் செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணி, 90 காலக் கட்டங்களில் அணிந்திருந்த ஜெர்ஸி மாடலில் புதிய உடை உருவாக்கப்பட்டுள்ளது. கழுத்தில் இரட்டை பட்டை கொண்ட டிஸைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

90'ஸ் தருணங்கள்
அந்த ஜெர்ஸியை அணிந்து போஸ் கொடுத்துள்ள ஜடேஜா, "Rewind to 90's #lovingit #india." என்று கேப்ஷனிட்டு அதனை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நாஸ்டாலஜி தருணங்களை கண் முன்னே கொண்டு வரும் புதிய ஜெர்ஸி குறித்து ரசிகர்கள் பலரும் ட்வீட் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications