Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர்களை ஆட்டமிழக்க வைத்தது எப்படி? பிளானை உடைத்த ஜடேஜா.. ஆடுகளம் குறித்தும் கருத்து

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஜடேஜா அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா சரிவிலிருந்து மீண்டு பெரிய ரன்களைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜா அடுத்தடுத்து மூன்று முக்கிய வீக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ஆஸ்திரேலியா 177 ரன்களில் முதலில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில் தான் பந்து வீசியது எப்படி என்பது குறித்து ஜடேஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததை தற்போது பார்க்கலாம்.

குழப்பத்தை ஏற்படுத்தினேன்

குழப்பத்தை ஏற்படுத்தினேன்

முதலில் சுழற் பந்து வீச்சுக்கு நன்றாக திரும்பும் வகையில் ஆடுகளும் தயாரிக்கப்படவில்லை. மற்ற ஆடுகளங்களை பார்க்கும் போது இங்கு கொஞ்சம் பவுன்ஸ் குறைவாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்து தற்காப்பு ஆட்டத்தில் விளையாடுவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டின் இயற்கையே அதுதானே. நான் இன்று பேட்ஸ்மேன்களை குழப்பும் வகையில் பந்து வீசினேன்.

மார்னஸ் விக்கெட்

மார்னஸ் விக்கெட்

ஒரு பந்து நேராக வரும் வகையிலும் அடுத்த பந்து திரும்பும் வகையிலும் வீசினேன். இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் பந்து எப்படி வருகிறது என்று எதிர்பார்த்து குழம்பிவிடுவார்கள். இதே போல் நான் ஸ்டெம்புக்கு அருகே வந்து இன்று பந்து வீசினேன். இதன் மூலம் பந்தை திருப்ப எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக நான் வீசியபோது மார்னஸ் இறங்கி வந்து அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து அவர் கணிக்க முடியாதபடி திரும்பியது. இதனால் அவர் ஆட்டம் இழந்தார்.

ஸ்மித் விக்கெட்

ஸ்மித் விக்கெட்

மார்னஷ் லாபஸ்சேனுக்கு நான் எங்கிருந்து பந்து வீசினேனோ ஸ்மித்துக்கும் அதே இடத்தில் இருந்து பந்து வீசினேன். அது திரும்பாமல் நேராக சென்று ஸ்டெம்பை தாக்கியது. நான் கோணங்களை பயன்படுத்தி மட்டுமே இன்று பந்து வீசினேன். இந்த தொடருக்கு முன்பு ரஞ்சிக்கோப்பையில் தமிழ்நாட்டை அணிக்கு எதிராக விளையாடியது என்னுடைய உத்வேகத்தை மேலும் அதிகரித்தது. நான் பந்து வீசும் முறை எனக்கு இன்று மனதிற்கு திருப்தியை கொடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்டெம்ப்ட் குறி வைத்து தொடர்ந்து பந்து வீசினால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.

யுத்தியே இது தான்

யுத்தியே இது தான்

இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் எல் பி டபிள்யூ முறையில் ஆட்டம் இழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து நான் டாட் பால்களை வீச வேண்டும் என முயற்சி செய்கிறேன். நான் கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை தவற விட்டேன். ஆசிய கோப்பை, உலக கோப்பை என முக்கியமான போட்டுகளில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் 100% உடல் தகுதி எட்டி சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைத்தேன், அது இன்று சாத்தியமானது என்று ஜடேஜா கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 9, 2023, 23:56 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+