உலககோப்பைக்கான இந்திய அணி இது தான்.. ஜடேஜா கொடுத்த மாஸ் அப்டேட்.. யாருக்கு எந்த இடம்?
மும்பை : உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் இந்திய அணியில் யார் விளையாட போகிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
எனினும் இந்த விமர்சனத்தை மறுத்துள்ள ஜடேஜா உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஏற்கனவே டிராவிட் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அக்சர் பட்டேலை நடுவரிசையில் இந்திய அணி களம் இறக்கியது. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜடேஜா வரும் ஆசிய கோப்பையிலும் உலக கோப்பையிலும் எந்த அணியை நாங்கள் களம் இறக்கப் போகிறோம் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியவர் ஆசிய கோப்பைக்கும் உலகக்கோப்பைக்கும் முன்பு இந்த ஒரு தொடர் தான் இருக்கிறது. எனவே நாங்கள் ஏதேனும் சோதனை செய்ய வேண்டும் என்றால் இந்த தொடரை வைத்து தான் மேற்கொள்ள முடியும். எனவேதான் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிளேயிங் லெவனின் சில மாற்றங்கள் கொண்டு வந்தோம்.
இதன் மூலம் அணியில் உள்ள பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து எங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அணியின் கேப்டன்னும் பயிற்சியாளரும் எந்த வீரர்களை களமிறக்குவது எப்படி அவர்கள் விளையாட போகிறார்கள் என்பது குறித்து முன்பே முடிவு செய்து விட்டார்கள். எனவே இதில் எந்த குழப்பமும் யாருக்கும் கிடையாது. ஆசிய கோப்பை தொடருக்கான அணி ஏற்கனவே எங்களிடம் இருக்கிறது.
தற்போது நாங்கள் எந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேன் களம் இறக்கி வாய்ப்பு தருவது என்பது குறித்து மட்டும் தான் யோசித்து வருகிறோம். இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது குறித்து கவலைப்படவில்லை. நாங்கள் செய்த சோதனை காரணமாக அந்த ஆட்டத்தில் தோற்கவில்லை. நாங்கள் விளையாடிய ஆடுகளம் தான் எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
இப்போது சில வீரர்களை சில வேறு இடத்தில் களம் இறக்கி அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை மட்டும் தான் நாங்கள் பார்த்தோம். ஏனென்றால் பெரிய தொடர்களுக்கு முன்பு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது மிகவும் முக்கியம் என்று ஜடேஜா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications