Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 6 சிக்சர்.. அதிரடி சதம்.. டி20 போட்டியில் சாதித்த ஜடேஜா!

ராஜ்கோட்: ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார் ரவீந்திர ஜடேஜா. சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் நடைபெற்று வரும் டி 20 போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில், ஜாம் நகர் அணி மற்றும் அம்ரேலி அணிகள் மோதின.

10வது ஓவரில் பதற வைத்தார்

10வது ஓவரில் பதற வைத்தார்

ஜாம் நகர் சார்பில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். எதிரணியின், நீலம் வம்ஜா வீசிய 10வது ஓவரை எதிர்கொண்டபோது 6 பந்துகளையும், சிக்சர்களாக அடித்தார் ரவீந்திர ஜடேஜா.

சதம் விளாசல்

சதம் விளாசல்

இந்த போட்டியில், அதிரடி காட்டிய ஜடேஜா, 69 பந்துகளில் 154 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், இப்போட்டியில் ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7வது வீரர்

7வது வீரர்

ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 7வது வீரராக இணைந்துள்ளார் ஜடேஜா. இந்த பட்டியலை முதன்முதலில் யுவராஜ் சிங் இடம் பெற்றார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசியிருந்தார்.

இந்தியாவுக்காக இப்படி ஆடுங்கப்பா

இந்தியாவுக்காக இப்படி ஆடுங்கப்பா

இந்திய அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டரான ஜடேஜா, பந்து வீச்சில் அவ்வப்போது ஜொலித்தாலும், பேட்டிங்கில் சமீபத்தில் பெரிதாக சாதிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய இவரை மீண்டும் அடுத்த சீசனில் அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 16, 2017, 14:52 [IST]
Other articles published on Dec 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+