Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா பேட்டிங், பவுலிங் செய்து பார்த்திருப்பீங்க, வாளை சுத்தி பார்த்திருக்கிறீர்களா?: வீடியோ இதோ

ராஜ்கோட்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் அழகாக வாளை சுத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், என்ஜினியர் ரீவா சோலான்கிக்கும்(25) குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. முன்னதாக சனிக்கிழமை இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியின்போது ஜடேஜா தனது குடும்பத்தார், உறவினர்கள் முன்பு வாளை வீசி அழகாக சாகசம் செய்தார். அவர் வாள்வீச்சில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணைதயளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.

ரீவா சோலான்கி ஆத்மியா கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். அவரது தாய் பிரஃபுல்லபா சோலான்கி இந்திய ரயில்வே ஊழியை ஆவார். ரீவாவின் தந்தை ஹர்தேவ்சிங் சோலான்கி ஒரு தொழில் அதிபர்.

ஹர்தேவ் சிங் திருமணத்திற்கு முன்பே ஜடேஜாவுக்கு ஆடி கார் ஒன்றை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 18, 2016, 13:14 [IST]
Other articles published on Apr 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+