Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கர்மா உங்களை பார்த்து கொள்ளும்.. மீண்டும் தோனி உடன் ஜடேஜா மோதல்? ஒரே பதிவால் குழம்பிய ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் ஜடேஜா போட்ட ஒரு ட்விட் தற்போது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் திடீரென்று சமூக வலைத்தளத்தில் ஜடேஜா ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் கர்மா எப்போதும் திரும்பி உங்களை வந்து சந்திக்கும் விரைவாகவோ இல்லை தாமதமாகவோ கண்டிப்பாக நிச்சயம் உங்களை நோக்கி வரும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Ravindra jadeja tweet about karma made lot of speculation

இதற்கு அவருடைய மனைவி உங்களுடைய பாதையில் நேராகச் செல்லுங்கள் என பதிலளித்திருக்கிறார். இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய்விட்டனர். நேற்று ஆட்டத்தில் ஜடேஜா பந்துவீச்சில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அப்போது தோனி அவரை அழைத்து ஏதோ பேசியது போல் இருந்தது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரசிகர்கள் தோனி ஜடேஜாவை திட்டியதாகவும் இதற்கு தான் ஜடேஜா இவ்வாறு டிவிட் போட்டு இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

Ravindra jadeja tweet about karma made lot of speculation

மேலும் சிலர் சென்னை அணி ரசிகர்கள் சிலர் தோனி களத்திற்கு வருவதற்காக ஜடேஜா ஆட்டமிழக்க வேண்டும் என நினைப்பது ஜடேஜா மனதை பாதித்துள்ளதாகவும் அதற்காகத்தான் அவர் இப்படி போட்டு இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். இதனால் என்ன பிரச்சனையாக இருக்கும் என பலரும் யோசித்து வருகிறார்கள். ஒருவேளை ஜடேஜாவை யாராவது பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டார்களா அல்லது ஜடேஜா மனைவி அரசியலில் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் ஏதேனும் பிரச்சனையா என்பது போன்ற பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பிளே ஆஃப் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் நிலையில் ஜடேஜா தேவையில்லாமல் இப்படி ட்விட் போட்டு அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் ரசிகர்கள் சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Story first published: Sunday, May 21, 2023, 22:15 [IST]
Other articles published on May 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+