Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயுடுவுக்கு காயம்... அடுத்த போட்டியிலயும் விளையாடுறது கஷ்டம்தான்... காசி விஸ்வநாதன் அறிவிப்பு

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி மும்பை இந்தியன்சுடன் வெற்றியும் ராஜஸ்தான் ராயல்சுடன் தோல்வியும் அடைந்துள்ளது.

முதல் போட்டியில் அணி வீரர் அம்பத்தி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 71 ரன்களை குவித்த நிலையில், நேற்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த போட்டியில் அவர் பங்கேற்தும் கடினம் என்றும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

71 ரன்களை குவித்த ராயுடு

71 ரன்களை குவித்த ராயுடு

சிஎஸ்கே அணி அடுத்தடுத்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் மோதியுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியனஸ் அணியை சிறப்பாக விளையாடி திணறடித்தது. இந்த போட்டியில் அணியின் அம்பத்தி ராயுடு சிறப்பாக விளையாடி 71 ரன்களை குவித்திருந்தார். இதுவும் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

போட்டியில் இடம்பெறாத ராயுடு

போட்டியில் இடம்பெறாத ராயுடு

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆனார். இந்த போட்டியில் சிஎஸ்கே 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையான அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

காசி விஸ்வநாதன் அறிவிப்பு

காசி விஸ்வநாதன் அறிவிப்பு

இந்நிலையில் அம்பத்தி ராயுடுவிற்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவர் கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்றும் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவருடைய காயம் கடுமையாக இல்லை என்றும் ஆனால் அவர் அடுத்த போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆனால் அவர் பிட்டாக உள்ளநிலையில், அடுத்த போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாகவும் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அடுத்ததாக துபாயில் வரும் 25ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை பெற்றுள்ள சிஎஸ்கே அணி, அந்த போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Story first published: Wednesday, September 23, 2020, 20:25 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+