Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் சதம் பார்க்க ரெடியா?? ஐபிஎல் இன்றைய போட்டி.. ஆர்சிபிக்கு தீராமல் உள்ள பழைய கணக்கு - விவரம்

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Recommended Video

IPL 2022: 3 Changes RCB can make to Win against KKR | OneIndia Tamil

கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய 15வது சீசனில் 10 அணிகளுமே தங்களது முதல் போட்டியில் விளையாடிவிட்டன.

இதனையடுத்து அடுத்தக்கட்ட போட்டி இன்று தொடங்குகிறது. இதில் முதல் சவாலே விராட் கோலி மீதுதான் உள்ளது.

பழித்தீர்க்க ரெடியாகும் ஆர்சிபி

பழித்தீர்க்க ரெடியாகும் ஆர்சிபி

கடந்தாண்டு ஐபிஎல்-ன் ப்ளே ஆஃப் சுற்றில் ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் தான் மோதின. மிகவும் பலமான அணியாக இருந்த ஆர்சிபி, அப்போது 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடரில் இருந்தும் வெளியேறியது. இந்நிலையில் அதனை சரி செய்யும் வாய்ப்பாக இன்றைய போட்டி அமைந்துள்ளது. புதிய கேப்டன் டூப்ளசிஸும் தயாராக உள்ளார்.

 இரு அணிகளின் புள்ளிவிவரம்

இரு அணிகளின் புள்ளிவிவரம்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 17 முறையும், ஆர்சிபி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 2 போட்டிகளில் கொல்கத்தா அணியின் ஆதிக்கமே இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஆர்சிபிக்கு உள்ளது.

தற்போதைய ஃபார்ம் என்ன

தற்போதைய ஃபார்ம் என்ன

நடப்பு சீசனை பொறுத்தவரையில் இரு அணிகளுமே பேட்டிங்கில் பலமாக உள்ளது. ஆனால் பவுலிங்கில் கேகேஆர் கை தான் ஓங்கியுள்ளது. ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் 205 ரன்களை குவித்தது. எனினும் அதனை டிஃபண்ட் செய்ய முடியவில்லை. ஆனால் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சிஎஸ்கேவை 131 ரன்களுக்கு சுருட்டியது.

கோலியின் சதம் ரெடியா?

கோலியின் சதம் ரெடியா?

மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் தான் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. இதே மைதானத்தில் தான் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இரு அணிகளுமே 200+ ரன்களை விளாசியதால், இன்றும் ஹை ஸ்கோர் மேட்ச்சாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலியின் சதம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, March 30, 2022, 15:35 [IST]
Other articles published on Mar 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+