Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி, டிவில்லியர்ஸ் பொறுப்பான ஆட்டம்... டெல்லியை வென்றது பெங்களூர்... பிளேஆப் நுழைய முடியுமா!

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது. கேப்டன் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் அதிரடியாக அரை சதம் அடிக்க பெங்களூர் அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனின் 45வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 3ல் மட்டும் வென்று 6 புள்ளிகளுடன் டெல்லி டேர்டெவில்ஸ் 8வது இடத்தில் உள்ளது. 10 ஆட்டங்களில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள பெங்களூர் அணி 7வது இடத்தில் உள்ளது.

இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி சீசனின் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடினாலும், போதிய வெற்றிகள் கிடைக்கவில்லை. அடுத்த ஆடும் மூன்று ஆட்டங்களில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் டெல்லிக்கு இல்லை.

வாய்ப்பு ரொம்ப கம்மி

வாய்ப்பு ரொம்ப கம்மி

கிட்டத்தட்ட அதே நிலையில்தான் பெங்களூரு அணியும் உள்ளது. எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும் கிட்டத்தட்ட அந்த அணிக்கும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இல்லை.

அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்குமா

அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்குமா

அதே நேரத்தில் மற்ற அணிகள் ஏதாவது தவறு செய்து, கடைசி நேரத்தில் ஏதாவது அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்குமா என்று பெங்களூர் அணி எதிர்பார்க்கிறது. அதனால், அனைத்து ஆட்டங்களிலும் வெல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும்.

டெல்லி ரன் குவிப்பு

டெல்லி ரன் குவிப்பு

டெல்லியில் நடக்கும் சீசனின் 45வது ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. முந்தைய போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த், 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 46, விஜய் சங்கர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா

பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா

182 ரன்கன் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கேப்டன் விராட் கோஹ்லி 40 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிச்சர்களுடன் 70 ரன்கள் சேர்த்தார். டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பெங்களூக்கு கிடைத்துள்ளது.

Story first published: Saturday, May 12, 2018, 23:44 [IST]
Other articles published on May 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+