பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் திருப்புமுனையை ஆர்சிபி அணிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே வாரத்தில் கோபுரத்தில் இருந்த ஆர்சிபி அணி தற்போது தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் rcb அணியின் ரசிகர்கள் தான். ஆர்சிபி அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒருமுறை கூட இந்த 18 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.
தற்போது தான் நடப்பு சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரசிகர்களின் கனவை நிறைவேற்றியது. ஆர்சிபி அணி ரசிகர்கள் பொதுவாக சமூக வலைத்தளத்தில் அட்ராசிட்டி செய்து கொண்டிருப்பார்கள்

முதன்முதலாக சிஎஸ்கேவுக்கு எதிராக சண்டையை கண்ணன் தேவி டீப்பொடி சிஎஸ்கே புடிபுடி என்று நடனம் போட்டு கிண்டல் செய்து வன்மத்தை ஆரம்பித்ததே அவர்கள் தான். இப்படி ஒவ்வொரு அணியையும் வம்பிழுத்த ஆர்சிபி ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டார்கள். சிஎஸ்கே அணியை வீழ்த்திவிட்டு சிஎஸ்கே பெண் ரசிகர்களிடம் கூட தவறாக நடந்து கொண்ட ஆர்சிபி ரசிகர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விராட் கோலியின் தீவிர உழைப்புக்கு கிடைத்த பரிசாக 18 ஆண்டுக்குப் பிறகு ஆர்சிபிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. ஆனால் இதனை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் ஆர்சிபி ரசிகர்கள் செய்த அட்டூழியம் தான் தற்போது மிகப்பெரிய இன்னல்களை அந்த அணிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு பெரிய சாதனையை கொண்டாடுவதற்காக பெங்களூர் அணி நிர்வாகம் சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஆர்சிபி ரசிகர்கள் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்திருந்தால் இத்தகைய பிரச்சனையே வந்திருக்காது. இந்த உயிரிழப்பு சம்பவம் தான் ஆர்சிபி அணிக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆர்சிபி அணி மீது வழக்கு பதிவு, ஆர்சிபி அணி நிர்வாகி கைது என தற்போது சின்னசாமி மைதானத்திற்கு வேறு இடத்திற்கு மாற்ற மாநில அரசு யோசித்து வருகிறது. பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தற்போது ஆர்சிபி அணியின் உரிமையாளர் 17000 கோடி ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு அணியை விற்க முடிவெடுத்திருக்கிறார்.
இதன்மூலம் ஆர்சிபி அணியின் சகாப்தமே முடிவுக்கு வரப்போகிறது. சாம்பியனாக இருந்த ஒரே வாரத்தில் தற்போது அணியையே விற்கும் நிலைக்கு ஆர்சிபி வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்த அணியின் ரசிகர்கள் தான் என சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற அணி ரசிகர்களை வம்பு இழுத்து பேசுவது, ஏதோ நாங்கள்தான் வானத்திலிருந்து குதித்தது போல் நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஆர்சிபி ரசிகர்கள் ஈடுபட்டனர்.
மேலும் வெற்றியை கூட கொண்டாட முடியாத ஒரு சூழலை ஆசிபி ரசிகர்கள் தங்களது வீரர்களுக்கு ஏற்படுத்தி விட்டார்கள். இதனால் ஏற்பட்ட பிரச்சனை ஆர்சிபி அணிக்கு ஒரு முடிவுரையை எழுத போகிறது. சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியிடம் அடுத்த ஆண்டும் இதே பெங்களூரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறிய அணி உரிமையாளர் தற்போது அணியையே விற்கும் நிலைக்கு வந்திருக்கிறார் என்றால் இது அனைத்துக்கும் ஆர்சிபி ரசிகர்களின் அட்டூழியம் தான் காரணம் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.