For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம பல்பு.. பில்டப் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஐபிஎல் அணி.. கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்!

Recommended Video

IPL 2020 | RCB Changed new logo after huge hype

பெங்களூர் : ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், தன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

இந்த லோகோவை வெளியிடும் முன் அந்த அணி பில்டப் கொடுத்த நிலையில், அதை கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

சில ரசிகர்கள், அந்த அணியின் பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 உச்சத்துல குரு இருந்தா லக் தானா வரும் -சச்சின் குறித்து கங்குலி அங்கலாய்ப்பு உச்சத்துல குரு இருந்தா லக் தானா வரும் -சச்சின் குறித்து கங்குலி அங்கலாய்ப்பு

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணி மாற்றம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இது வரை ஐபிஎல் வெல்லாத அணியாக வலம் வருகிறது. வரும் 2020 ஐபிஎல் தொடரில் அந்த அணி கோப்பை வெல்ல உழு முனைப்புடன் திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக அணியில் ஒரு மாற்றம் செய்யப் போவதாக அறிவித்து பில்டப் கொடுத்து வந்தது.

பயங்கர பில்டப்

பயங்கர பில்டப்

சமூக வலைதளங்களில் அந்த அணி தன் லோகோ மற்றும் பெயரை மாற்றி வைத்து இருந்தது. பழைய பதிவுகள் பலவற்றை நீக்கியும் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் சாஹல் ஆகியோர் "என்ன ஆச்சு?" என டிசைன் டிசைனாக கேள்வி கேட்டு பயங்கர பில்டப் கொடுத்து வந்தனர்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

அந்த அணி தன் பெயரை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றப் போவதாக ஒரு தகவல் வலம் வந்தது. அதே சமயம், லோகோ நீக்கப்பட்டு இருந்ததால், புதிய லோகோ மாற்றப்படும் எனவும் கூறப்பட்டது. இதில் ஒன்று மட்டுமே நடந்தது.

புதிய லோகோ

புதிய லோகோ

அந்த அணி தன் புதிய லோகோவை மட்டும் வெளியிட்டது. சிங்கம் ஒன்று நின்று இரண்டு கால்களால் நின்று கொண்டு, சீறுவது போல புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த லோகோ, அணியின் மனநிலையையும், சித்தாந்தத்தையும் வெளிப்படுத்துவதாக கூறி உள்ளனர் அந்த அணியின் நிர்வாகிகள்.

ரசிகர்கள் கிண்டல்

ஆனால், ரசிகர்கள் புதிய லோகோ மற்றும் அதற்காக கொடுக்கப்பட்ட பில்டப்பை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், பெயர் மாற்றம் செய்யப்படாததை பலரும் சுட்டிக் காட்டி, பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

கப்பு வாங்கினீங்களா?

லோகோ எல்லாம் புதுசு புதுசா மாத்துறீங்களே, ஆனா கப்பு மட்டும் வாங்க மாட்டேங்கிறீங்க என ஒருவர் கிண்டல் செய்துள்ளார். அந்த அணி 2009, 2011 மற்றும் 2016இல் ஐபிஎல் இறுதிப் போட்டி வரை மட்டுமே முன்னேறி உள்ளது. ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை.

வெறும் பில்டப் தான்

"வெறும் பில்டப் தான். ஆனா, அதே செயல்பாடு தான்" என ஒருவர் இந்த லோகோ மாற்றத்துக்கு முந்தைய பில்டப்புகளை கிண்டல் செய்து இருக்கிறார். மேலும், அந்த அணி எப்போதும் போல தோல்வி அடையத் தான் போகிறது என கூறி இருக்கிறார்.

எதுக்கு ஹைப்?

எதுக்கு இவ்ளோ ஹைப்? இதை ஒரே பதிவில் போட்டுட்டு போயிருக்கலாமே.. என ஒருவர் கூறி தன் கடுப்பை காட்டி இருக்கிறார். கிட்டத்தட்ட, மூன்று நாட்களாக பெரிதாக ஏதோ செய்வது போல பாவ்லா காட்டி, கடைசியில் லோகோ மட்டும் மாற்றியதை கேள்வி கேட்டுள்ளார்.

பருத்தி மூட்டை

பயங்கர பில்டப் செய்த பின் வெறும் லோகோவை மட்டும் மாற்றி உள்ளனர். அந்த லோகோவிலும் புதிதாக ஒன்றும் இல்லை. இதை கேலி செய்யும் விதமாக ஒருவர் "இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" என கூறி இருக்கிறார்.

இறுதி வரை செல்லும்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த வருடத்தில் லோகோ மாற்றும் பதிவை ட்வீட் செய்கிறதோ, அந்த முறை எல்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதனால், இந்த வருடம் அந்த அணிக்கு தன் வாழ்த்துக்கள் என கூறி இருக்கிறார் ஒரு ரசிகர்.

சீப் சரக்கு தான்!

ஆர்சிபி அணி புதிய லோகோவை வெளியிட்டு பின் ஆங்கிலத்தில் அதைப் பற்றி நிறைய எழுதி உள்ளது. அதை கண்ட கைப்புள்ள, "நீ என்ன வேணா இங்கிலீஷ்ல எழுது.. ஆனா ராயல் சேலஞ்சர் சீப் சரக்கு தான்" என பங்கமாக கலாய்த்துள்ளார்.

Story first published: Friday, February 14, 2020, 16:41 [IST]
Other articles published on Feb 14, 2020
English summary
RCB just changed new logo after huge hype. Most of the fans are making fun of the logo change and the build up.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X