இம்முறை சிறப்பான சம்பவங்கள் இருக்கு.. ஆர்சிபி வீரர்களிடம் சஞ்சய் பங்கர் பேச்சு
பெங்களூரு: ஐபிஎல் 2022வது ஆண்டு தொடரில் ஆர்சிபி இதற்கு முன் செய்யாத பல விசயங்களை செய்ய உள்ளதாக தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணியின் கேப்டனாக டுபிளஸிஸ் பொறுப்பேற்றுள்ளார். மும்பையில் பெங்களூரு அணி தனது முதல் பயிற்சி முகாமில் நேற்று தொடங்கியது.
பயிற்சி முகாமில் நேற்று ஆர்சிபி வீரர்களை வரவேற்று அணியின் இயக்குனர் மைக் ஹேசன் மற்றும் சஞ்சய் பங்கர் பேசினர்.

மைக் ஹேசன்
முதலில் பேசிய மைக் ஹேசன், இதற்கு முன்பு இங்கு உள்ள பலரையும் பலர் டிவியில் தான் பார்த்து இருப்பீர்கள். ஒரு சிலர் எதிருக்கு எதிர் விளையாடி இருப்பீர்கள். ஆனால் முதல் முறை அனைவரும் ஒன்றாக இருக்க போகிறீர்கள். அனைவரும் ஒன்றிணைந்து நன்றாக பழகுங்கள். ஒன்றாக சேர்ந்து காபி குடியுங்கள்.

மகிழ்ச்சி
இம்மறை பல புதிய முகங்கள் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களை நாங்கள் வேண்டும் என்றே இரண்டு அணியாக பிரித்துள்ளோம். இனி வரும் நாட்களில் தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார்.

சஞ்சய் பங்கர்
இதனைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், இம்மறை இதற்கு முன்பு செய்யாத பல ஸ்பெஷல் விசயங்களை நாம் செய்ய உள்ளோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. பல திறமையான வீரர்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்கள் அனைவரின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. முதலில் ஆர்சிபி அணியின் அமைப்பு குறித்து பார்ப்போம். பிறகு முழு பயிற்சியில் ஈடுபடுவோம்.

தீவிர பயிற்சி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில் கேப்டன் டுபிளஸிஸ் அதிரடியாக விளையாடி பெரிய சிக்சர் அடித்தார். இதே போன்று பயிற்சியில் லவ்னித் என்ற வீரர் பயிற்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பெங்களூரு அணி வரும் சீசனில் முதல் போட்டியில் வரும் 27ஆம் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.


Click it and Unblock the Notifications