Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் நம்பிக்கையால் உருப்படாமல் போன மல்லையா அணி சொந்த ஊரில் வெற்றிபெற துடிப்பு

பெங்களூர்: ஓவர் கான்ஃபிடன்ட் உடம்புக்கு ஆகாது என்ற வார்த்தை விஜய் மல்லையாவின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பக்காவாக பொருந்துகிறது. பேட்டிங் வரிசையிலுள்ள பெயரை பார்த்தாலே எதிரணிகள் பயப்படும்படியாக இருந்தாலும் தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது அந்த அணி.

பார்த்தாலே அதிருதில்ல..

பார்த்தாலே அதிருதில்ல..

ஐபிஎல் சீசன்-7ல் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக உள்ளது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்குதான். கிறிஸ் கெய்ல், ஏப் டி வில்லியர்ஸ், விராட் கோஹ்லி, யுவராஜ்சிங் ஆகியோர் ஒரே அணியில் இருப்பதை பார்த்து எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு கை நடுக்கமே வந்துவிடும்.

நல்லாத்தான் போச்சு

நல்லாத்தான் போச்சு

சீசனின் முதல் இரு பந்தையங்களிலும் கிறிஸ் கெய்ல் இல்லாமலே கூட எளிதாக வென்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். ஆனால் கெய்லும் களத்தில் இறங்கிய பிறகும் கூட சொதப்ப ஆரம்பித்துள்ளது.

ஹாட்ரிக் தோல்வி

ஹாட்ரிக் தோல்வி

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது பெங்களூர். அதிலும் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி மோசமான ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இருந்தாலும் ஐந்திலும் தோற்ற மும்பையை விட நாங்கள் பரவாயில்லை என மனசை தேத்திக்க வேண்டியதுதான்.

ஓவர் நம்பிக்கை

ஓவர் நம்பிக்கை

பெங்களூர் அணியின் இந்த நிலைக்கு அதீத நம்பிக்கைதான் காரணம். நம்மிடம்தான் சாரை சாரையாக பேட்ஸ்மேன் இருக்கிறார்களே என்ற மெத்தனத்தில் மோசமான ஷாட்டுகளை அடித்து அவுட் ஆகி பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்துகிறார்கள் அந்த அணியினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 70 ரன்களில் மொத்த டீமும் ஆல் அவுட் ஆன மேட்சை பார்த்தாலே அதை தெரிந்துகொள்ளலாம்.

உள்ளூரில் புலி

உள்ளூரில் புலி

ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில் தாயகம் திரும்பியுள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நாளை நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்த உள்ளது. சொந்த ஊரான பெங்களூரில் விளையாட உள்ளது தங்களுக்கு நிச்சயம் திருப்பு முனை பந்தையமாக அமையும் என்று அணி தலைவர் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, May 3, 2014, 15:57 [IST]
Other articles published on May 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+