
3 பேர் போட்டிகள்
கேப்டன் பதவிக்கான போட்டியில் ஃபாப் டூப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் மேக்ஸ்வெல் முதல் சில போட்டிகளில் இருக்க மாட்டார். தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியை வழிநடத்தியபோது பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நேர திருப்பம்
ஆனால் அதிலும் குழப்பம் இருந்தது. விராட் கோலியின் ராஜினாமா கடிதத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் ஏற்கவே இல்லை எனத் தகவல் வெளியானது. மேலும் ஆர்சிபி வெளியிட்ட விளம்பர உருவங்களும் கோலியின் உருவத்தை போன்றே இருந்தது. இதனால் கோலியே மீண்டும் பதவியேற்கலாம் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

யார் புதிய கேப்டன்
இந்நிலையில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது. பெங்களூரு மியூசியம் சாலையில் நடத்தப்பட்ட கோலாகல விழாவில் ஆர்சிபி புதிய கேப்டனாக பாஃப் டூப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோலியை போன்றே சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தி பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

தோனிக்கே சவால்
டூப்ளசிஸ் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் தோனிக்கே பல சமயங்களில் டூப்ளசிஸ் ஆலோசனைகள் வழங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படி சிறந்த அனுபவத்தை வைத்துள்ள டூப்ளசிஸ் ஆர்சிபிக்கு கோப்பையை வென்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விராட் கோலி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











