Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூருவில் குவியும் கூட்டம்.. இன்று மதியம் கேப்டன் அறிவிப்பு.. ஆனால் ஆர்சிபி கொடுத்த ட்விஸ்ட்!

பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்ற அறிவிப்பு இன்று மதியம் 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

ஐபிஎல் 15வது சீசனுக்கான போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதியன்று தொடங்குகிறது. அனைத்து அணிகளும் தங்கள் பணிகளை முடித்துவிட்டன.

ஆனால் ஆர்சிபி மட்டும் தனது புதிய கேப்டன் யார் என்ற அறிவிப்பை தாமதப்படுத்திக்கொண்டே வருகிறது.

கேப்டன் தேர்வுகள்

கேப்டன் தேர்வுகள்

கேப்டன்சி ரேஸில் ஃபாப் டூப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் மேக்ஸ்வெல் முதல் சில போட்டிகளில் இருக்க மாட்டார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சி சரியாக அமையவில்லை. இதனால் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நேர திருப்பம்

கடைசி நேர திருப்பம்

ஆனால் அதிலும் கடைசி நேர ட்விஸ்ட் இருந்தது. விராட் கோலியின் ராஜினாமா கடிதத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் ஏற்கவே இல்லை எனத்தகவல் வெளியானது. மேலும் ஆர்சிபி வெளியிட்ட விளம்பர உருவங்களும் கோலியின் உருவத்தை போன்றே இருந்தது. இதனால் மீண்டும் கோலி தான் கேப்டனாகிறார் என்ற குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.

பெங்களூருவில் குவிந்த கூட்டம்

பெங்களூருவில் குவிந்த கூட்டம்

இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை இன்று மதியம் 3.45 மணிக்கு பிரமாண்டமாக வெளியிடுகிறது நிர்வாகம். பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் இதற்காக பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகின்றன. அனைவரும் கோலிதான் கேப்டன் என நினைத்து உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

IPL 2022: Faf du Plessis Replaces Kohli as RCB Captain | OneIndia Tamil
கோலியின் வீடியோ

கோலியின் வீடியோ

இந்த கோஷத்திற்கு ஏற்றார் போலவே கோலி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி அறிவிக்கப்போகிறேன், புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு ஆர்சிபி அணி வரப்போகிறது எனக்கூறினார். இதனால் இன்று இந்தியா - இலங்கை 2வது டெஸ்ட் போட்டியை விட ஆர்சிபி கேப்டன்சி அறிவிப்பு தான் அதிக கவனம் பெற்றுள்ளது.

Story first published: Saturday, March 12, 2022, 13:27 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+