Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அடுத்த கேப்டன் முடிவானது.. சோகத்தில் 2 சீனியர் வீரர்கள்.. நிர்வாகம் கூறிய விளக்கம் என்ன?

பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து நிர்வாகம் இறுதி முடிவை எடுத்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களது, ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்து புதிய அப்டேட்களை வழங்கி வருகின்றன.

கேப்டன்சி பிரச்சினை

கேப்டன்சி பிரச்சினை

புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள், கேப்டன்கள் யார், அணியின் பெயர், லோகோ என முக்கிய விஷயங்களை அறிவித்துவிட்டன. ஆனால் முன்னணி அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இன்னும் கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்காமல் உள்ளது. இதற்கு காரணம் 3 சீனியர் வீரர்கள் பட்டியலில் உள்ளதுதான்.

ஏன் இந்த தாமதம்

ஏன் இந்த தாமதம்

அதாவது விராட் கோலிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான பட்டியலில் இருந்தனர். இதில் இருந்து அனுபவம், வெற்றிகள் ஆகியவையை கணக்கில் கொண்டு கேப்டன் யார் என்பதை தேர்ந்தெடுக்க தான் நீண்ட ஆலோசனை நடந்து வந்ததாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதி முடிவு வந்தது

இறுதி முடிவு வந்தது

இந்நிலையில் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டன் என இறுதி செய்யப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸுக்கு தான் சர்வதேச அளவில் கேப்டன்சி உள்ளது. இதே போல ஐபிஎல் தொடரிலும் நீண்ட அனுபவம் உள்ளது. தினேஷ் கார்திக் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து கேப்டன்சி செய்ய நல்ல தேர்வு தான். ஆனால் அவரின் கேப்டன்சியில் கொல்கத்தா அணி தோல்விகளை சந்தித்ததால் ஆர்சிபி தயங்குகிறது.

மேக்ஸ்வெல் இல்லையா?

மேக்ஸ்வெல் இல்லையா?

க்ளென் மேக்ஸ்வெல்லை பொறுத்தவரையில், அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இருக்க மாட்டார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு மார்ச் 12ம் தேதிக்கு மேல் தான் ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம்.

Story first published: Monday, March 7, 2022, 18:12 [IST]
Other articles published on Mar 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+