Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியின் கன்சிஸ்டன்சி.. சிஎஸ்கே மிஸ் செய்வது அதைதான்.. தோனி அடுக்கிய காரணங்கள்!

பெங்களூர்: கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடவில்லை என்றும், அதனை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தோனி தெரிவித்துள்ளார். வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கை என்று கூறிய தோனி, ஆர்சிபி அணி கன்சிஸ்டன்சியுடன் 2 சீசன்களாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் மினி ஏலம் நெருங்கிவிட்ட சூழலில், சிஎஸ்கே அணி பல்வேறு முடிவுகளை எடுக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி பெங்களூரில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் தோனி பேசுகையில், ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் விளையாடுவேனா என்பது தெரியாது.

MS Dhoni

மருத்துவரிடம் இருந்து அறிக்கையை பெற வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பது தெரிய வேண்டும். இதனை தெரிந்து கொண்ட பின்னரே, இறுதி முடிவை எடுப்பேன். அதேபோல் எந்தவொரு அணியும் பேப்பரில் பார்க்கும் போது வலிமையாகவே தெரியும். அதனால் பேப்பரில் வலிமையாக இருப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, சிறிய வித்தியாசம் தான் இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி தடுமாறி இருக்கிறது. இதனை ஒத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. அதேபோல் ஆர்சிபி அணி 2 சீசன்களாக சிறந்த ஆட்டத்தை விளையாடி இருக்கிறது. வாழ்க்கையும் அப்படி தான் இருக்கும்.

நமக்கு நல்ல காலம் வருவதை போல், கொஞ்சம் சோகமான நாட்களும் இருக்கும். அதில் இருந்து வெளியில் வர கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியான சூழல்களில் அணியுடன் எப்படி பணியாற்றுகிறோம் என்பது முக்கியம். வெற்றி பெறும் போது எதுவும் தெரியாது. ஆனால் தோல்வி தொடங்கும் போதுதான் நமது உண்மையான மனவலிமை வெளிப்படும்.

ஆர்சிபி அணி கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணியில் கன்சிஸ்டன்சி இல்லை. அடுத்த சீசனில் வீரர்கள் காயம் இல்லாமல், அனைவரும் தொடர் முழுவதும் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் ரோல் மற்றும் பொறுப்பு நன்றாக தெரியும். அதனால் அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்போம் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 25, 2026, 11:27 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+