Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் உலகை மிரள வைத்த மாபெரும் சாதனை.. வெறும் 1 சதவீத வாய்ப்பில் பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி அணி

பெங்களூரு : உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடந்து வருகின்றன. ஆனால் எந்த தொடரிலும் ஒரு அணி இப்படி ஒரு சாதனையை செய்ததே இல்லை என சொல்லும் அளவுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று, ஏழு தோல்விகளை சந்தித்தது. அதிலும் தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. அதன் பின் அடுத்த ஆறு போட்டிகளை தொடர்ந்து வென்று தற்போது ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

RCB record RCB is the only team to enter the play-off after six consecutive losses

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து ஆறு தோல்விகளை சந்தித்த பின், அடுத்த ஆறு போட்டிகளை தொடர்ந்து வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் முதல் எட்டு போட்டிகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஒரு சதவீதமாக இருந்தது. அப்போது மற்ற அணிகளின் வாய்ப்பு சதவீதம் அதிகமாக இருந்தது.

இந்த புள்ளி விவரம் முழுவதும் கணினி மூலம் கணிக்கப்பட்டவை. அப்படி கணினியால் ஒரு சதவீத வெற்றி வாய்ப்பு மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து ஆறு வெற்றிகளை பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளது. எட்டு போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு அணி லீக் சுற்றின் முடிவில் நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதற்கு முன் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் இதேபோல புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்து பிள்ளையார் சுற்றுக்கு முன்னேறி உள்ளன ஆனால் தொடர்ந்து ஆர் போட்டிகளில் தோல்வி அடைந்து அதன் பின் எந்த அணியும் பிள்ளையார் சுற்றுக்கு முன்னேறியதே இல்லை அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மாபெரும் சாதனை செய்துள்ளது

Story first published: Sunday, May 19, 2024, 9:07 [IST]
Other articles published on May 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+