Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலையில் புகார் சொன்ன சாஹல்.. மாலையில் அதிரடியாக நீக்கப்பட்ட ஆர்சிபி பயிற்சியாளர்கள்.. என்ன நடந்தது?

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு சாம்பியன் பட்டம் வாங்காத அணி என்றால், அது ஆர்சிபி தான். எனினும் கடைசியாக 2020 ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு சென்றது.

இதற்கு முக்கிய காரணம் என்றால், அது அந்த அணியில் பியிற்சியாளராக இணைந்த சஞ்சய் பங்கர் மற்றும் மைக் ஹேச்னால் தான். ஆனால், இப்படி சிறப்பாக செயல்பட்ட இருவரையும் ஆர்சிபி அணி அதிரடியாக நீக்கியது.

rcb coach

இன்று காலை தான் ஆர்சிபி அணி தம்மை மதிக்கவில்லை என்றும், 8 ஆண்டுகளாக விளையாடிய எனக்கு அணியை விட்டு நீக்கப்பட்ட போது ஒரு போன் கால் கூட செய்யவில்லை என்று சாஹல் குற்றஞ்சாட்டினார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்சிபி அணியை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையிய்ல் ஆர்சிபி இயக்குனர் டைக் ஹேசன் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்கள் தலைமையில் ஆர்சிபி சிறப்பாக செயல்பட்ட பிறகும், இப்படி ரு முடிவை ஆர்சிபி நிர்வாகம் எடுத்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இவர்களுடைய பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், இந்த நடவடிக்கையா என்றும் தெரியவில்லை. இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் இந்த பணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அண்மையில் லக்னோ அணியிலிருந்து விலகிய ஆண்டி பிளவர், ஆர்சிபி அணிக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிலர், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் நன்மதிப்பை பெற்ற ரவி சாஸ்த்ரி, பயிற்சியாளராக அல்லது இயக்குனராக ஆர்சிபி அணிக்கு வரலாம் என்று கூறுகின்றனர். மேலும் டுபிளசிஸ்க்கு வயது ஆவதால், ஆர்சிபி அணிக்கு மீண்டும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் 17வது சிசன் நெருங்க, நெருங்க 10 அணிகளிலும் 10 மாற்றங்கள் கூட நிகழ் வாய்ப்பிருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சாஹலுக்கு ஆர்சிபி செய்தது மிகப் பெரிய தவறு என்ற குற்றஞ்சாட்டு பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Story first published: Sunday, July 16, 2023, 23:58 [IST]
Other articles published on Jul 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+