Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் இறந்தும் சந்தோசமாக வீடியோ வெளியிட்ட ஆர்சிபி.. பொங்கி எழுந்து திட்டித் தீர்த்த நெட்டிசன்கள்

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும், ரசிகர்கள் தங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து கோஷமிட்டதையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. பெங்களூருவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் இறந்ததாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இதை அடுத்து ரசிகர்கள் அந்த வீடியோவின் கீழ் சென்று சரமாரியாக திட்டித் தீர்த்தனர். "ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு இந்த கொண்டாட்ட வீடியோ தேவையா?" என விமர்சித்தனர். மேலும், "வெளியே மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே நீங்கள் நிகழ்ச்சியை நடத்தியது சரியா?" எனவும் விமர்சித்து வந்தனர். இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கணக்குகளிலிருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

RCB Removes Victory Celebration Video After Backlash Over Crowd Crush Deaths

முன்னதாக நேற்று பெங்களூருவில் மாலை 5 மணி அளவில் பெங்களூர் அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் நடத்த இருந்தனர். காவல்துறை அந்த ஊர்வலத்தை நடத்த அனுமதி மறுத்தது. தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிப்பை வெளியிட்டது காவல்துறை.

அதன் பிறகும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பு அந்த ஊர்வலத்தை நடத்த அனுமதிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

சின்னசாமி மைதானத்தில் விழா முடிந்த பிறகு அந்த ஊர்வலம் நடத்தப்பட இருந்தது. ஆனால், சின்னசாமி மைதானத்தின் நுழைவாயிலில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் உயிரிழப்பு சம்பவங்களை அடுத்து அந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், வெளியே ரசிகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், 11 பேருக்கு மேற்பட்டவர்கள் இறந்த நிலையில் உள்ளே வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் விராட் கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்தார். இந்த சம்பவம் பலரையும் கோபமடைய செய்துள்ளது.

இந்த நிலையில்தான் உள்ளே நடந்த வெற்றி கொண்டாட்டங்களை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம். "வெளியே என்ன சூழ்நிலை நடக்கிறது, ரசிகர்கள் மனநிலை என்ன" என எதையும் யோசிக்காமல், "தங்கள் அணியின் வெற்றி கொண்டாட்டம் தான் முக்கியம்" என்ற சுயநல மனநிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக ரசிகர்கள் விளாசியதையடுத்து நீக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Thursday, June 5, 2025, 10:28 [IST]
Other articles published on Jun 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+