Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 முக்கிய வீரர்கள் விடுவிப்பு.. ஆர்சிபி எடுத்த முக்கிய முடிவுகள்.. தக்கவைப்பு பட்டியல் இதோ!

மும்பை: 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஆர்சிபி அணி

ஆர்சிபி அணி

அதன்படி ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அந்த அணியை தற்போது டூப்ளசிஸ் வழிநடத்தி வருகிறார். அவரின் தலைமையில் தற்போது விராட் கோலி, தினேஷ் கார்த்திக், சபாஷ் அகமது, ஜோஸ் ஹாசல்வுட் உள்ளிட்ட 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

டூப்ளசிஸ், விராட் கோலி, சுயாஸ் பிரபுதேசாய், ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வானிண்டு ஹசரங்கா, சபாஷ் அகமது, ஹர்ஷல் பட்டேல், டேவிட் வில்லி, கார்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரார், முகமது சிராஜ், கார்ன் ஷர்மா, மஹிபால் லாம்ரார், முகமது சிராஜ், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்

ஆர்சிபி அணியில் இருந்து மொத்தமாக 5 வீரர்கள் தான் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் பெஹண்டார்ஃப், அனீஸ்வர் கௌதம், சாமா மிலிண்ட், லுவ்னித் சிஸோடியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட். இதில் ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரராக பார்க்கப்பட்டவர் ஜேசன் பெஹண்டோர்ஃப் ஆகும்.

மீதமுள்ள தொகை

மீதமுள்ள தொகை

மெகா ஏலத்தின் போது பெங்களூரு அணி மொத்தமாக ரூ.88.45 கோடிக்கு வீரர்களை ஏலம் எடுத்திருந்தது. மீதம் ரூ.1.55 கோடியை கையில் வைத்திருந்தனர். தற்போது 5 வீரர்களை விடுவித்துள்ளதால் அந்த அணியின் பர்ஸ் தொகை ரூ.8.75 கோடியை கையில் வைத்துள்ளது.

Story first published: Tuesday, November 15, 2022, 19:27 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+