For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி அணியை வாங்க முட்டி மோதும் டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர், அதானி.. யாருக்கு ராயல் சேலஞ்சர்ஸ்?

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி குறித்து ஒரு செய்தி, ஐபிஎல் வட்டாரத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஆர்சிபி அணியை, அதன் தற்போதைய உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த அணியை வாங்க இந்தியாவின் இருபெரும் தொழிலதிபர்கள் உட்பட ஆறு பெரும் நிறுவனங்கள் தீவிரமாகப் போட்டியிடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல்-இன் அதிக மதிப்புமிக்க அணியாக கருதப்படும் ஆர்சிபி அணியை வாங்க, பல பெரும் நிறுவனங்கள் ஆர்வம்காட்டியுள்ளன. எந்தெந்த அணிகள் ஆர்சிபி அணியை வாங்கும் போட்டியில் உள்ளன என்று பார்க்கலாம்.

அதானி குழுமம்: 2022-ல் அகமதாபாத் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் தீவிரமாகப் போட்டியிட்டு, நூலிழையில் வாய்ப்பை இழந்த அதானி குழுமம், தற்போது ஆர்சிபி-யை வாங்க மீண்டும் களமிறங்கியுள்ளது.

ஜே.எஸ்.டபுள்யூ (JSW) குழுமம் - பார்த் ஜிண்டால் (டெல்லி கேப்பிட்டல்ஸ் இணை உரிமையாளர்): இதுதான் இந்த விற்பனை போட்டியின் மிகப்பெரிய திருப்பம். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் 50% பங்குகளை வைத்துள்ள ஜே.எஸ்.டபுள்யூ குழுமத்தின் தலைவர் பார்த் ஜிண்டால், ஆர்சிபி-யை வாங்க தீவிரமாக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் ஆர்சிபி-யை வாங்கினால், ஐபிஎல் விதிமுறைப்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள தனது பங்குகளை அவர் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதார் பூனாவாலா: இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட்-இன் தலைமைச் செயல் அதிகாரியான அதார் பூனாவாலா, இந்த ஏலத்தில் மற்றொரு முக்கியப் போட்டியாளராக உள்ளார். சமீபத்தில், அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில், "சரியான விலை இருந்தால் ஆர்சிபி ஒரு சிறந்த அணி..." என்று பதிவிட்டது, இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இரு அமெரிக்க நிறுவனங்கள்: இவர்களைத் தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெரிய தனியார் பங்கு நிறுவனங்களும் ஆர்சிபி-யை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

RCB Sale Adani Delhi Capitals Co-Owner Line Up to Buy along with two American investors group

ஆர்சிபி அணியின் விலை என்ன?

தற்போதைய உரிமையாளர்களான டியாஜியோ நிறுவனம், ஆர்சிபி அணிக்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹16,600 கோடி) விலையாகக் கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காகக் கேட்கப்படும் மிக அதிகமான விலையாகும்.

விற்க வேண்டாம்?

ஆர்சிபி-யின் தாய் நிறுவனமான 'டியாஜியோ கிரேட் பிரிட்டன்' அணியை விற்க விரும்பினாலும், அதன் இந்தியக் கிளையான 'டியாஜியோ இந்தியா', இந்த விற்பனைக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அணியை விற்க வேண்டாம் என்று இந்தியக் கிளை, தாய் நிறுவனத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இதனால் இந்த விற்பனை முடிவில் ஒரு யூ-டர்ன் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஒப்பந்தத்தில் கோலி கையெழுத்திடாதது ஏன்?:

ஆர்சிபி அணியின் விற்பனை செய்தி, விராட் கோலியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சமீபத்தில், ஆர்சிபி வழங்கிய புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கோலி கையெழுத்திட மறுத்ததாகச் செய்திகள் வெளியாகின. அணி உரிமை மாற்றம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

கோலி ஆர்சிபி-யிலேயே தொடர்வாரா?

"நான் வேறு எந்த ஐபிஎல் அணிக்காகவும் விளையாட மாட்டேன்," என்று கோலி பலமுறை தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், ஒருவேளை அதானி போன்ற ஒரு புதிய உரிமையாளர், அணியை முற்றிலுமாக மாற்றியமைக்க முடிவு செய்தால், கோலியின் நிலை என்னவாகும் என்ற தவிப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோப்பையை வென்ற கொண்டாட்டம் முடிவதற்குள், ஆர்சிபி அணி ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் மாதங்களில், ஐபிஎல்-இன் இந்த 'ராயல்' அணியின் தலைவிதி என்னவாகும், அதன் 'கிங்' கோலியின் பயணம் எங்கே தொடரும் என்பது தெரியவரும்.

Story first published: Friday, October 17, 2025, 17:21 [IST]
Other articles published on Oct 17, 2025
English summary
RCB Sale: Adani, Delhi Capitals Co-Owner Line Up to Buy along with two American investors group
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+