Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்ளோ அடிச்சும்.. மேட்சை மாற்றிய அந்த "7 ஓவர்"... ஆட்டத்தை அப்படியே "கண்ட்ரோல்" செய்த தோனி

ஷார்ஜா: பெங்களூரு டாப் கியரில் மேட்சை தொடங்கினாலும், தோனி தனது அபார கேப்டன்சியில் ரன்களை எகிற விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.24) நடைபெற்று வரும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்ய, முதல் ஆடிய பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

 சிஎஸ்கே அதே அணி

சிஎஸ்கே அதே அணி

ஷார்ஜாவில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டு பிளசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (c & wk), டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம் பெற்றனர். அதேபோல், பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில், சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் மற்றும், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.

 பறக்கவிட்ட கோலி

பறக்கவிட்ட கோலி

இதில் தொடக்கம் முதலேயே பெங்களூரு தொடக்க பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, படிக்கல் அடித்து ஆட தொடங்கினர். சென்னை பவுலர்களின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தன. குறிப்பாக, தாகூர் ஓவரில் கோலி அடித்த அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் பறந்தது. அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில், சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் ஒரு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுதான். 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த கோலி, பிராவோ ஓவரில் கேட்ச்சானர். பிறகு, டி வில்லியர்ஸ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் ஓவரில் கேட்ச்சானர். அதே ஓவரில் படிக்கல் 50 ரன்களில் 70 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். பிறகு மேக்ஸ்வெல்லும் 11 ரன்களில் அவுட்டானார்.

 10 ஓவர்களில் 90

10 ஓவர்களில் 90

10 ஓவர்களில் 90 ரன்கள் குவித்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஜஸ்ட் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த 7 ஓவர்கள் தான், மேட்சை ஆர்சிபியிடமிருந்து சிஎஸ்கே பக்கம் திரும்பியது. குறிப்பாக பிராவோ, தாகூர் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தி, சரியான இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி, அட்டகாசமாக ரன்களை கட்டுப்படுத்தினர் கேப்டன் தோனி. அதன் பிறகு பெங்களூரு அணியால் மீண்டு வரவே முடியவில்லை. டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என்று ஹிட்டர்கள் இருந்தும் அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஷார்ஜா ஸ்லோ பிட்ச் என்பதால், இறுதிக்கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க ரொம்பவே திணறினார்கள். இதனால், பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 10 ஓவர்களில் அந்த அணி 66 ரன்களே எடுக்க முடிந்தது.

 பிளே ஆஃப் வாய்ப்பு

பிளே ஆஃப் வாய்ப்பு

சென்னை அணியைப் பொறுத்தவரை தற்போது 12 புள்ளிகள் பெற்றிருப்பதால், இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். எனவே, எந்தவித சிக்கலும் இன்றி, பிளே ஆஃப் முன்னேற, இந்த போட்டியை பயன்படுத்திக் கொள்ள சிஎஸ்கே முயற்சிக்கும். அதேசமயம், 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஸோ, பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இந்த போட்டி பெங்களூருவுக்கு சற்று முக்கியத்துவம் வாய்ந்ததே.

Story first published: Friday, September 24, 2021, 21:31 [IST]
Other articles published on Sep 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+