For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு முடிவோடத்தான் இருக்காரு விராட் கோலி... டைவ் அடித்து கேட்ச் பிடித்த கேப்டன்

துபாய் : துபாயில் தங்களது குவாரன்டைனை முடித்துள்ள ஆர்சிபி அணியினர் தொடர்ந்து கடந்த சில தினங்களாக பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

CSK Players test Negative, likely to play with Mumbai Indians in Opener | OneIndia Tamil

இந்நிலையில் இந்த பயிற்சி ஆட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் மனதிற்கு தைரியத்தை அளித்து வருவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

RCB Share Video Of Virat Kohli Taking Diving Catch In Practice

மேலும் நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது அவர் ஒற்றை கையில் டைவ் அடித்து பிடித்த கேட்ச் அனைவரையும் கவரும்வகையில் இருந்தது.

துபாயில் தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்ட ஆர்சிபி வீரர்கள் தொடர்ந்து கடந்த சில தினங்களாக பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் திருப்தியாக உள்ளதாகவும் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது கேப்டன் கோலி டைவ் அடித்து ஒற்றை கையில் பிடித்த கேட்ச், சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்தின் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோவை அந்த அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பயிற்சியின்போது இதேபோல கேட்ச் பிடித்ததை அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 4, 2020, 17:44 [IST]
Other articles published on Sep 4, 2020
English summary
Virat Kohli held a diving, one-handed catch during training
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+