Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி வீரரை திட்டிய முகமது சிராஜ்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார்.. சரி கோலி கிட்ட எதிர்பார்க்காதீங்க

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 190 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது.

இந்த இலக்கு அருகில் வரை ராஜஸ்தான் அணி வந்தது. எனினும் முகமது சிராஜ், டேவிட் வில்லி, ஹர்சல் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்தினர்.

இதில் முகமது சிராஜ்,ஹர்சல் விக்கெட்டை டக் அவுட் ஆக்கினார். இது ஆட்டத்தின் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போட்டியின் போது ஆர் சி பி வீரர் மகிபால் லோம்ரரை சிராஜ் பில்டிங் மிஸ் செய்ததற்கு கடுமையாக திட்டு இருக்கிறார். வேக பந்துவீச்சாளர்கள் எப்போதுமே களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். அதுவும் அவர்கள் ஓவர்களில் கேட்ச் அல்லது பில்டிங் மிஸ் செய்தால் அவ்வளவுதான்.

RCB Speedster Mohammed siraj apologized for his outburst on mahipal lomror

இதனால் லோம்ரரை சிராஜ் கொஞ்சம் கடுமையாக நடத்தியதாக தெரிகிறது. எனினும் போட்டி முடிந்த பிறகு மகிபால் லோம்ரரிடம் தாம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டதாக முகமது சிராஜ் அறிவித்துள்ளார். இதேபோன்று ஆர் சி பி அணியின் கேப்டனாக களம் இறங்கி உள்ள விராட் கோலி களத்தில் தொடர்ந்து மோசமாக நடந்து கொண்டு வருகிறார்.

எதிரணியில் சாதாரண இளம் வீரர் ஆட்டம் இழந்தால் கூட விராட் கோலி கடுமையாக கத்துகிறார். ஏற்கனவே சிஎஸ்கே ஆட்டத்தில் தகாத வார்த்தையை விராட் கோலி பயன்படுத்தியதாக கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விராட் கோலி மீண்டும் எதிரணி வீரர்களை தகாத வார்த்தைகளால் பில்டிங் செய்யும் போது திட்டி வருகிறார்.

இது ரசிகர்கள் சிலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. முகமது சிராஜ் மன்னிப்பு கேட்டது போல் விராட் கோலியும் இதுபோன்று மன்னிப்பு கேட்டு களத்தில் நார்மலாக நடந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Monday, April 24, 2023, 18:16 [IST]
Other articles published on Apr 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+