ஆர்சிபியில் இணையும் டேவிட் வார்னர்?..“ஒரே கல்லில் 3 பிரச்சினைக்கு தீர்வு” மெகா ஏலத்தில் பலே ப்ளான்
மும்பை: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை ஒப்பந்தம் செய்ய ஆர்சிபி அணி குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022ம் ஆண்டு தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கப் போகிறோம் என்ற திட்டத்தை வகுத்து வருகின்றன.

ஆர்சிபி அணி திட்டம்
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் வேட்டையை ஓப்பனிங்கில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது. ஐதராபாத் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட டேவிட் வார்னரை பல கோடிகள் செலவிட்டாவது வாங்கிவிட ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 3 வகையில் நன்மைகள் கிடைக்கவுள்ளது.

கேப்டன் பதவி
விராட் கோலியை வேலை வாங்கும் அளவிற்கு ஒரு கேப்டனை தேடி வருகிறது ஆர்சிபி அணி. அதற்கு மிகவும் பொறுத்தமானவர் டேவிட் வார்னர். இவர் கோலியுடன் மிகவும் நெருக்கமான நண்பர். இதுமட்டுமல்லாமல் இவரின் கேப்டன்சியில் ஐதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது. எனவே இவரின் தலைமையில் அணியை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் அந்த அணி திட்டமிட்டுள்ளது.

அதிரடி ஓப்பனிங்
கடந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய வார்னர், டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். எனவே ஓப்பனிங்கில் ஒருபுறம் டேவிட் வார்னர், மற்றொரு புறம் விராட் கோலி களமிறங்கினால் ஆர்சிபிக்கு அதிரடி தொடக்கம் கிடைக்கும். மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல் களமிறங்கி ரன்களை உயர்த்தி விடுவார்.
Recommended Video

சிறப்பான கூட்டணி
ஆர்சிபி அணிக்கு கடந்த காலங்களில் இருந்த ஒரே பிரச்சினை பார்ட்னர்ஷிப் தான். கோலி, டிவில்லியர்ஸை தாண்டிய பின்னர் சரிவர பார்ட்னர்ஷிப் கிடைப்பதில்லை. ஆனால் இந்த முறை வார்னருக்கு பக்கபலமாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் உள்ளார். இதன் மூலம் கோலி, மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோர் கூட்டணி ஒட்டுமொத்த அணியையும் கடைசி வரை அழைத்துச் செல்லும். இதில் மிட்செல் ஸ்டார்-க்கையும் இணைத்து பெரிய கூட்டணியாக உருமாற்றவும் அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications