Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த 15 பேர்..” மெகா ஏலத்தில் ஆர்சிபி எடுக்கவுள்ள 15 ஸ்டார் வீரர்கள்.. முற்றிலும் புதுசு - பட்டியல்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி குறிவைத்துள்ள வீரர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணியாக இருக்கும் ஆர்சிபி இந்தாண்டு பல்வேறு மாற்றங்களை சந்திக்கவுள்ளது.

விராட் கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், புதிய கேப்டனையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆர்சிபி ப்ளான்

ஆர்சிபி ப்ளான்

மெகா ஏலத்திற்காக ஆர்சிபி தற்போது, விராட் கோலி (ரூ. 15 கோடி), க்ளென் மேக்ஸ்வெல் ( ரூ.11 கோடி ), முகமது சிராஜ் ( ரூ.7 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. தற்போது ரூ.57 கோடியுடன் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க களத்தில் இறங்கவுள்ளது. அதன்படி எந்தெந்த வீரர்களை குறிவைத்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனர்கள்

ஓப்பனர்கள்

ஆர்சிபி அணிக்கு இந்த முறை ஓப்பனிங்கிற்காக டேவிட் வார்னர், ஷிகர் தவான், ஆரோன் ஃபின்ச் என மூன்று முன்னணி தேர்வுகள் உள்ளனர். இவர்கள் மூவருமே தற்போது டி20க்களில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக வார்னரை ஏலம் எடுப்பதற்காக தான் ஆர்சிபி ஆர்வம் காட்டி வருகிறது. ஏனென்றால் இவரை கேப்டனாகவும் நியமித்துக் கொள்ளலாம். இதே போல ஃபின்ச்- கேப்டன்சி அனுபவம் உடையவர்.

பவுலர்கள்

பவுலர்கள்

பவுலிங்கை பொறுத்தவரையில் குறைந்த விலையில் சிறந்த வீரர்களை எடுக்க ஆர்சிபி திட்டமிட்டுள்ளது. அதன்படி டி.நடராஜன், மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன், பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கு குறிவைத்துள்ளது. பிரஷித் கிருஷ்ணா தற்போது இந்திய அணியில் கலக்கி வருகிறார். ஜோர்டர் டெத் ஓவர்களிலும், மார்க் வுட் மிடில் ஓவர்களிலும் திறம்பட வீசக்கூடியவர்கள். இதே போல தமிழக வீரர் நடராஜன் கடைசி ஓவர்களில் யார்க்கர் மூலம் அசத்துவார். இவர்கள் இந்த முறை அனைத்து அணிகளாலும் கண்டுக்கொள்ளப்படாமல் போகலாம். எனவே அடிப்படை விலையிலேயே ஆர்சிபி தூக்கவுள்ளது.

சுழற்பந்துவீச்சாளர்கள்

சுழற்பந்துவீச்சாளர்கள்

யுவேந்திர சாஹலின் இடத்தை நிரப்ப ஆர்சிபிக்கு அனுபவ வீரர் தேவை. அதற்கேற்றார் போல தான் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லியோன் இந்த முறை ஐபிஎல்-க்கு வருகை தருகிறார். அவர் சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறார். வாஷிங்டன் சுந்தரும் ஆர்சிபியின் திட்டத்தில் இருக்கிறார். அவர் பேட்டிங்கிலும் பயன்படுவார். இதே போல இலங்கை வீரர் வானிண்டு அசரங்காவும் மீண்டும் ஆர்சிபிக்கு வரலாம்.

Story first published: Thursday, February 10, 2022, 18:12 [IST]
Other articles published on Feb 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+