Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெங்களூர் அணியை இதைவிட கேவலமாக யாராலும் கிண்டல் செய்ய முடியாது!

Recommended Video

பெங்களூர் அணியை கிண்டல் செய்த தனியார் ஹோட்டல்

பெங்களூரு: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை கிண்டல் செய்யும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரென்ட் செய்துள்ளதுதான் டாக் ஆப் த டவுனாக உள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது.

RCB trolled by a restaurant in Bengaluru

இந்த ஆண்டு கோப்பை நமக்கே எனப்படும் யே சால கப் நமதே' என்ற கோஷத்துடன் பெங்களூர் அணி களமிறங்கியது. ஆனால், இதுவரை விளையாடியுள்ள 8 ஆட்டங்களில் 3ல் மட்டுமே வென்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் தான் பெங்களூர் அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்து விளையாடும் 6 ஆட்டங்களில் 5ல் வென்றால் தான், பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் பெங்களூர் அணி உள்ளது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரென்ட், இந்த முறை கோப்பை நமக்கே என்ற கோஷம் பிரிண்ட் செய்யப்பட்ட பில்களை அளித்து வந்தது. ஆனால், தற்போது அதை மாற்றியுள்ளது. அடுத்த ஆண்டு கோப்பை நமக்கே என்று அது மாற்றப்பட்டுள்ளது.

டுவிட்டரில் தற்போது இதுதான் வேகமாக பரவி வருகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள பெங்களூர் அணியை, இதைவிட கேவலமாக யாராலும் கிண்டல் செய்ய முடியாது.

Story first published: Wednesday, May 2, 2018, 20:54 [IST]
Other articles published on May 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+