Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB வெற்றி பேரணி.. பெங்களூரில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சோகம்.. 50 பேர் காயம்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை கோப்பையை வெல்லாத மிகவும் பிரபலமான அணியாக ஆர்சிபி இருந்த நிலையில் விராட் கோலி கோப்பையை கைப்பற்ற கடுமையாக இந்த 18 ஆண்டுகள் உழைத்தார்.

இந்த சூழலில் ரசிகர்களின் மிகப்பெரிய கனவை ஆர் சி பி அணி நேற்று அகமதாபாத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி நிறைவேற்றியது. இதனை அடுத்து ஆர் சி பி அணி இன்று பெங்களூருக்கு வந்திருந்தது. முதலில் ஆர் சி பி ஐ வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் வளம் வருவார்கள் என்று கூறப்பட்டது.

Bangalore stempade

ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடிய நிலையில் திறந்த வெளி பேருந்துக்கான பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஆர் சி பி அணிக்கான பாராட்டு விழா பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்சிபி அணியின் இந்த வெற்றி விழாவை பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடினர்.

அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மைதானத்திற்குள் செல்ல வேண்டும் என தடுப்புகளையும் மீறி ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு செல்ல முயன்றதில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் உயிர் இழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆர் சி பி அணியின் வெற்றி கனவு 18 ஆண்டுகள் கழித்து நிறைவேறிய நிலையில், அதனை கொண்டாட ஆர் சி பி வீரர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெங்களூர் வந்த நிலையில் தற்போது அந்த சம்பவமே சோகமாக மாறி இருக்கிறது.

Story first published: Wednesday, June 4, 2025, 18:18 [IST]
Other articles published on Jun 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+