Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்னப் பையன்.. அவரை சமாளிக்க முடியலை.. சிஎஸ்கே வெற்றி.. திட்டம் போட்டு ஏமாந்த கோலி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது, அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி ருதுராஜ் கெயிக்வாட்டின் அசத்தல் ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.

பரபர போட்டி

பரபர போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என கூறப்பட்டாலும் அந்த அணிக்கு மிகக் குறுகிய வாய்ப்பு உள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என தெரிய வந்ததால் பெங்களூர் அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதால் எளிதாக வீழ்த்தலாம் என நினைத்து கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் கடைசி நேரத்தில் சொதப்பினர்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

துவக்க வீரர்கள் பின்ச் 15, தேவ்தத் 22 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏபி டிவில்லியர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே பந்துவீச்சு

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. சாம் கர்ரன் 3 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினார். sசான்ட்னர் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

அடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே அணிக்கு பாப் டுபிளெசிஸ் - ருதுராஜ் கெயிக்வாட் அபார துவக்கம் அளித்தனர். டுபிளெசிஸ் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி 39 ரன்கள் எடுத்தார்.

ருதுராஜ் அபாரம்

ருதுராஜ் அபாரம்

ருதுராஜ் கெயிக்வாட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 65 ரன்கள் எடுத்தார். தன் முதல் ஐபிஎல் அரைசதத்தை அவர் எட்டினார். அவரை கடைசி வரை வீழ்த்த முடியவில்லை. அது பெங்களூர் அணியின் பெரிய தோல்வியாக அமைந்தது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

நான்காவது வரிசையில் பேட்டிங் செய்ய வந்த தோனி 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 18.4 ஓவரில் சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெறச் செய்தார். சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏமாந்து போன கோலி

ஏமாந்து போன கோலி

சிஎஸ்கே அணியை சேஸிங் செய்ய வைத்து எளிதாக வீழ்த்தலாம் என திட்டமிட்ட கோலி, ருதுராஜ் எனும் இளம் வீரரிடம் ஏமாந்து போனார். இந்த தொடரில் 3 போட்டிகளில் 2 முறை டக் அவுட் ஆகி இருந்த ருதுராஜ் தன் முதல் சிறந்த ஆட்டத்தை ஆடி பெங்களூர் அணியை வெளுத்தார்.

Story first published: Sunday, October 25, 2020, 20:04 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+