
முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்
ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை விளையாடிய போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆயினும் ஐபிஎல் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

அடுத்த கட்டத்திற்கு நகரும் அணி
இந்நிலையில் அதே புள்ளிகளை பெற்றுள்ள ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இதையடுத்து இந்த அணிகளில் ஒரு அணி வெற்றி பெறும்நிலையில் அந்த அணி அடுத்த கட்டத்திற்கு நகரும்.

கடினமான போட்டி
ஐபிஎல்லின் 19வது போட்டியான இந்த போட்டியில் இந்த அணிகள் மோதவுள்ள நிலையில், இன்றைய போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டத்திற்கு நகரும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஆவல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை மோதிய ஆர்சிபி அணி சிறப்பான வெற்றி பெற்றது. முதல் 3 போட்டிகளில் சொதப்பிய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை அடித்து தன்னை நிரூபித்து கொண்டார். இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

சிறப்பான டெல்லி கேபிடல்ஸ் பௌலிங்
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் இரு அணிகளும் துபாய் சென்றுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறப்பான பௌலிங் ஆர்டரை சமாளிக்க ஆர்சிபி அணி அதிகமாகவே மெனக்கெட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications