Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

25வது சம்பவம்.. முதல்முறையாக ரன் அவுட்டான ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்.. நம்ம கோலி தான் காரணம்!

டெல்லி: ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முதல்முறையாக ரன் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். இதற்கு வழக்கம் போல் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். விராட் கோலி களத்தில் இருக்கும் போது நடக்கும் 25வது ரன் அவுட் இதுவாகும். இதனால் ரசிகர்கள் விராட் கோலியை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் ஜேகப் பெத்தேல் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் ஜேகப் பெத்தேல் அதிரடியாக ரன்களை விளாசினார்.

RCB vs DC For the first time in ipl RCB Captain Rajat Patidar got Run out for 6 runs against Delhi because of Virat Kohli

ஆனால் அக்சர் படேல் வீசிய 3வது ஓவரில் பெத்தேல் 12 ரன்களிலும், படிக்கல் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதன்பின் விராட் கோலி - ரஜத் பட்டிதார் கூட்டணி இணைந்தது. இந்த நிலையில் 4வது ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்த பந்தை மிட் விக்கெட் திசையை நோக்கி விராட் கோலி அடித்தார்.

இதன்பின் 2 அடிகள் நகர்ந்து வேகமாக க்ரீஸில் இருந்து வெளியேற, பந்தை பார்க்காத ரஜத் பட்டிதார் பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். ஆனால் பந்து நேராக கருண் நாயர் கைகளுக்கு செல்ல, அவர் உடனடியாக ஸ்டம்புகளை பதம் பார்த்தார். இதனால் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 6 ரன்களில் நடையை கட்டினார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரஜத் பட்டிதார் ரன் அவுட்டாகி வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

அதற்கு விராட் கோலியே முதற்காரணமாக அமைந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலிக்கும் ரன் அவுட்டுக்கும் அப்படி பொருந்தி போகும். அவருடன் ரன்களை எடுக்க ஓடும் பார்ட்னர்கள், எளிதாக ரன் அவுட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 24 முறை தனது பார்ட்னரை விராட் கோலி ரன் அவுட் செய்துள்ளார்.

தற்போது ரஜத் பட்டிதார் 25வது வீரராக விராட் கோலியால் ரன் அவுட்டாகி இருக்கிறார். அதேபோல் அவர் ரன் அவுட்டானதையும் கணக்கிட்டால், மொத்தமாக 33 முறை விராட் கோலி இருக்கும் போது ரன் அவுட் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் விராட் கோலியுடன் ஓடும் போது பார்ட்னராக இருக்கும் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 27, 2025, 22:33 [IST]
Other articles published on Apr 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+